இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்துள்ள மற்றுமொரு எரிபொருள் விலை.

இலங்கையில் அதிகரித்துள்ள
மற்றுமொரு எரிபொருள் விலை.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி 20 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், சில எஞ்சின் ஒயில் வகைகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுள்ளனர்.

இதேவேளை, ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருந்த 4 லீற்றர் இன்ஜின் ஒயிலின் விலை தற்போது ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை உயர்ந்துள்ளதாக என்ஜின் ஒயில் கடை உரிமையாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இன்று சில்லறை விற்பனையில் விற்கப்படும் எஞ்சின் ஒயிலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button