இலங்கை செய்திகள்

மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 22 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்த அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

அதன்படி, மே 22 மற்றும் மே 29 ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது.

அதேபோல், மே 22 முதல் ஜூன் 1 வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் பரீட்சை நடைபெறாத மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களுக்கும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும் தினமும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button