ஆன்மிகம்

உங்களுக்கு அதிக பண பிரச்சனை இருக்கா? இதை மட்டும் செஞ்சு பாருங்க. அப்புறம் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை வீடு தேடி வரும்..

உங்களுக்கு அதிக பண பிரச்சனை இருக்கா? இதை மட்டும் செஞ்சு பாருங்க.
அப்புறம் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை வீடு தேடி வரும்..

 

என்னதான் மனம் பெரிதாக இருந்தாலும், பணம் இருந்தால் தானே இன்று சமூகத்தில் மதிக்கின்றனர்.

பணம் தான் இன்று கெளரவமாகப் பார்க்கப்படுகிறது.

என்னதான் சம்பாதித்தாலும் கையில் நலுகாசு தங்க மாட்டுகிறதே என பலரும் புலம்புவதைப் பார்த்திருப்போம்.

பணம் சம்பாதிப்பது பெரிய விசயம் தான் என்றாலும், சம்பாதித்த பணத்தை வீட்டிலேயே தங்கவைப்பது அதைவிட பெரிய கலை.

இதோ இந்த பதிவில் உங்கள் வீட்டில் குபேரனை தங்கவைப்பது எப்படி எனப் பார்க்கலாம்

நமது வீட்டு நிதிநிலையைச் சீர்குலைப்பதில் ஆடம்பரம் என்னும் பெயரில் நாம் செலவு செய்யும் பணமே முக்கியப்பங்கு வகிக்கிறது.

இதனால் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். பணம் சம்பாத்யம் செலவை மட்டுமே கொண்டது அல்ல.

அதற்குள் சேமிப்பு, முதலீடு, வருமானத்தைப் பெருக்குதலும் அடங்கும். நாம் பத்து ரூபாய் செலவு செய்தாலும் அதை எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி மாதம் முழுவதும் நாம் செய்யும் செலவை குறித்துவைத்துக்கொண்டே வரவேண்டும்.

இந்த லிஸ்டை மாத இறுதியில் ஒத்துப் பார்த்தால் நாம் செய்ததில் எவ்வளவு தேவையற்ற செலவு எனத் தெரிந்துவிடும்.

அதேபோல் கடைகளுக்குச் செல்லும் போது உள்ளூர் வணிகர்களிடமே பொருள்களை வாங்கலாம்.

நாம் பெரிய, பெரிய மால்களுக்குச் செல்லும் போது மனம் ஆசைப்பட்டு நமக்குத் தேவையில்லாதப் பொருள்களையும் அதிகம் வாங்குவோம்.

இதேபோல் ஒருமுறை மளிகக்கடைக்குப் போனால் ஒரு மாதத்திற்கு தேவையான் பொருள்களை வாங்கிவந்துவிட வேண்டும்.

வீட்டில் தேவையில்லாமல் ஒரு லைட், பேன்கூட ஓடவிடக்கூடாது.

அடுப்பில் வெந்நீரை வைத்துவிட்டு மறந்துபோய் வேறு வேலை செய்வது உள்ளிட்ட விசயங்களைத் தவிர்க்கவேண்டும்.

டூவீலரோ, நான்கு சக்கர வாகனமோ ஆடம்பரத்திற்காக விலை கூடியதை வாங்காமல் எது நல்ல மைலேஜ் கொடுக்கும் எனப் பார்த்து வாங்கவேண்டும்.

இப்படியெல்லாம் திட்டமிட்டு செலவு செய்து பாருங்கள். உங்கள் கையில் பணம் நிற்கும்.

Related Articles

Back to top button