ஆன்மிகம்

மணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா. இந்த ரகசியத்தை அந்த செடி கிட்ட சொல்லி பாருங்கள். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்..

மணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா. இந்த ரகசியத்தை அந்த செடி கிட்ட சொல்லி பாருங்கள்.
பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்..

மணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா? இந்த ரகசியத்தை, அந்த செடி கிட்ட சொல்லி பாருங்களே! அந்த செடியும் சூப்பரா வளரும்.

உங்க கைல இருக்க பணம் காசும் வளர்ந்துகிட்டே போகும்.

பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக நிறைய பேர் வீட்டில் வைக்கக் கூடிய வாஸ்து செடி தான் இந்த மணிபிளான்ட்.

சில பேர் வீடுகளில் இது நன்றாக தழைத்து, கொடியாக படர்ந்து செழிப்பாக வளரும்.

சில பேர் வீடுகளில், எப்படித் தான் வைத்தாலும், அந்த மணிபிளான்ட் சரியாக வளரவே வளராது.

இந்த மணி பிளான்ட் செடி வைத்தால் நிச்சயம் அந்த வீட்டில் இருக்கக் கூடிய பண கஷ்டத்திற்க்கு தீர்வு கிடைப்பது மட்டும் உறுதி.

சில மன கஷ்டமும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதை நிறைய பேர் பிராக்டிகலா பார்த்திருப்பீங்க.

உங்க வீட்டில் மணி பிளாண்ட் செடி இருக்கு. இருந்தாலும் தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறதா.

அந்த மணிபிளான்ட் செடி சரியாக வளரவே மாட்டேங்குதே, இதற்கு என்ன செய்யலாம்? இந்தப் பிரச்சனைக்கு சொல்யூஷன் தரக்கூடிய ஒரு சின்ன டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் நம்மிடம் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் அலட்சியமாக நடத்தக்கூடாது. இன்னும் புரியும்படி சொல்லப்போனால், எந்த ஒரு பொருளையும் பராமரிக்க முடியும் என்றால் மட்டும்,

அதை வாங்கி நம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, உங்களுக்கு நேரமின்மை காரணமாக அதை பராமரிக்க, அதை கவனிக்க நேரமே இல்லை எனும் பட்சத்தில், அந்தப் பொருளை தயவு செய்து நீங்கள் வாங்காதீங்க.

ஒரு பொருளை வாங்கினால், கோடி ரூபாய் கிடைக்கும் என்றாலும், அதை உங்களால் பராமரிக்க முடியாத சூழ்நிலை இருந்தால், அதை நீங்க வாங்கவே கூடாது.

நீங்கள் வாங்கிய பொருளை மெயின்டனன்ஸ் பண்ணுவதற்கு டைம் இல்லை, ஆசைக்காக அதிர்ஷ்டத்திற்கு அந்த பொருளை மட்டும் வாங்கி வீட்டில் வைத்து விட்டீர்கள்.

ஒரு பொருளை வாங்கி வீட்டில் வைத்து விடுவதன் மூலம் மட்டுமே நமக்கு நன்மை நடந்துவிடாது.
மணி பிளான்டுக்குமே இதே கண்டிஷன் தான்.

மணி பிளான்ட் உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துவிட்டு, அதை கவனிக்காமல் அப்படியே விட்டு விடக்கூடாது. தினம்தோறும் அதற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும்.

தண்ணீரை ஊற்றும் போது, ஒரு சில வார்த்தைகளை மனதார மணிபிளான்டிடம் பேச வேண்டும்.

‘இந்த செடியை, வீட்ல வெச்ச அந்த நாளிலிருந்தே எங்க வீட்ல இருக்க கஷ்டமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுருச்சு.

தேவைக்கு ஏற்ப பணப்புழக்கமும் இருக்குது.’ இப்படியாக இரண்டொரு வார்த்தைகளை நேர்மறையாக பேசி தண்ணீரை ஊற்றுங்கள்.

வாரத்தில் ஒருமுறையாவது செடியில் உள்ள இலைகளில் எல்லாம் ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை தெளித்து, அதில் தூசி தும்பு இல்லாமல் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

‘அந்தச் செடியை உங்க வீட்ல வச்சதனால, நீங்க நல்லா இருக்கீங்க’ இந்த எண்ணம் மட்டும் எப்போதுமே உங்கள் மனதில் இருக்க வேண்டும். அந்த செடியை பார்க்கும்போதெல்லாம் அந்த செடிக்கு, நன்றியையும் தெரிவித்து விடுங்கள்.

எங்களுக்கு டைமெல்லா இல்லேங்க! இவ்ளோ எல்லாம் பேச முடியாது. அப்படின்னு சொல்றவங்க ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையை மட்டுமாவது சொல்லி, அந்த செடிக்கு தண்ணீரை ஊற்றுங்கள். வாயைத் திறந்து கூட சொல்ல வேண்டாம்.

மனசுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்டே தண்ணீர் ஊற்றுங்கள் போதும். அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கையில ஏற்படக்கூடிய மாற்றத்தை.

மணிபிளான்ட் செடி மட்டும் இல்ல, உங்க வீட்டில் வைத்திருக்க ரோஜா செடி, சாமந்திப்பூ செடி, கற்பூரவள்ளி செடி, துளசி செடி, எதுவாக இருந்தாலும் அது செழிப்பாக வளர, அதோடு இரண்டு வார்த்தைகளை மனதார பேசி, நன்றியை தெரிவித்தால் போதும், அது நமக்கு கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

செடி கொடிகளுக்கு நன்றி சொல்ல போயிட்டீங்க! இன்றைய சூழ்நிலையில், ஒரு சில மனிதர்கள் தங்களுக்கு உதவி செய்த சக மனிதர்களுக்கே நன்றி தெரிவதில்லையே.

மரமாக இருந்தாலும் செடிகொடிகள் ஆக இருந்தாலும் புழு பூச்சிகள் ஆக இருந்தாலும், உங்களோட கம்ப்யூட்டர், உங்களுடைய செல்போன், நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருட்களாக இருந்தாலும் அதற்கு, இந்த ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்தும் போது, அந்த குறிப்பிட்ட பொருளிடமிருந்து, நமக்கு பல நன்மைகள், பல நேர்மறை ஆற்றல்கள் வந்து கொண்டே இருக்கும் என்பதும் உண்மைதான்.

இறுதியாக நாம் எல்லோரும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம். இந்த பிரபஞ்சத்திற்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ, அந்த பிரபஞ்சமும் நமக்கு, அதை மீண்டும் பல மடங்கு பெருக்கி திருப்பி தரும்

Related Articles

Back to top button