இலங்கை செய்திகள்

சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பணியாளர்களின் தனியார் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

டிப்போக்களில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இன்று (22) எந்த நேரத்திலும் இவ்வாறான ஊழியர்களுக்கு டீசலை இலங்கை போக்குவரத்து சபை

டிப்போவில் பெற்றுக்கொள்ள முடியும் என ´அத தெரண´ வினவிய போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவுக்கு

அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கு வரிசையில்

நிற்காமல் அவர்களுக்கு தேவையான பெற்றோலை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி – Battinews

Related Articles

Back to top button