மருத்துவம்

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்..!

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்..!

பதின் பருவத்தில் அதிகமாக முகப்பரு வரும். பலரும் அதை வயதுக்கு ஏற்ற இயற்கையின் விளையாட்டு என கண்டுகொள்வது இல்லை.

இதனால் பருக்கள் போன பின்னரும் கூட அவற்றின் தடங்களாக கரும்புள்ளிகள் நம் முகத்தில் தங்கிவிடும்.

ஆனால் இந்த கரும்புள்ளீகளை மிகவும் எளிமையான முறையில் விரட்டி விடலாம்.

இதற்கு நம் வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருள்களே போதும். முதலில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது கின்னத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் பாதி எழுமிச்சை பழத்தை பிளிந்து ஊற்ற வேண்டும்.

அதனோடு காய்ச்சாத இரண்டு ஸ்பூன் பசும் பால் சேர்க்க வேண்டும். இப்போது இது இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.

இப்போது ஒரு க்ரீம் போன்று ஒன்று கிடைக்கும்.

இதை காலையோ, இரவோ எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஆனால் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை ஒரு முறை பேஸ் வாஸ் செய்துவிட்டுத்தான் உபயோகிக்க வேண்டும்.

இதை ஒரு காட்டன் துணியில் எடுத்து முகத்தில் தடவ வேண்டும்.

இயல்பாகவே எழுமிச்சை இயற்கையில் பிளீச்சிங் தன்மை கொண்டது.

இந்த பேஸ்டை 5 நிமிட கால அளவுக்கு மெதுவாக முகம் முழுவதும் தேய்க்க வேண்டும்.

அதன் பின்னர் இருபது நிமிடங்களுக்கு அதை ஊறவைக்க வேண்டும்.

இதை தினசரி இருவேளை வைத்து 7 நாள்கள் செய்தாலே உங்கள் முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் ஓடிவிடும்.

இதேபோல் கிராமப் பகுதிகளில்,ம் நீரோட்டம் இருக்கும் பகுதிகளில் பொடு தலை இலை என ஒன்று இருக்கும்.

இதுவும் முகத்தில் இருக்கும் மங்குவை விரைவாக நிக்கும். இதை நன்றாகக் கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

அதில் ஒரு டீ ஸ்பூனுக்கு, இரண்டு டீ ஸ்பூன் அளவுக்கு பசும்பால் சேர்த்து முகத்தில் தடவலாம்.

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். 7 நாள்களில் இதுவும் நல்ல பலனைத் தரும். நாட்டு மருந்து கடைகளிலும் கூட இந்த பொடுதலை இலை பொடி கிடைக்கும்.

அப்புறமென்ன ஏழே நாள்களில் இழந்து போன உங்கள் அழகு முகத்தோடு வலம் வாருங்கள்

Related Articles

Back to top button