ஆன்மிகம்

குபேரரை இப்படி வழிபட்டால் போதும் அவருடைய மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

குபேரரை இப்படி வழிபட்டால் போதும்
அவருடைய மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

செல்வத்தின் கடவுள் குபேரர்தான். ஒருவருக்கு கடன் தொல்லை நீங்கி வாழ்க்கையில் செல்வம் பெருக குபேரரைத்தான் வழிபட வேண்டும்.

குபேரரை வழிபடுவதற்கான வழிமுறைகளும், சிறப்பு மந்திரங்களும் உள்ளது.

கடவுள் மீது முழு நம்பிக்கையுடனும் தூய மனதுடனும் இந்த மந்திரங்களை கூற வேண்டும்.

அப்பொழுதுதான் நீங்கள் கேட்கும் வரம் கிடைக்கும்.

இந்த மந்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் செல்வம் மற்றும் அமைதியை மட்டுமின்றி வெற்றியையும் கொடுக்கும்.

குபேர மந்திரத்தை தினமும் உச்சரிப்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகளை வரவேற்கும்.

இந்த பதிவில் குபேரரின் அருள் கிடைக்க கூற வேண்டிய மந்திரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

குபேர பண மந்திரம் ‘ ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்ளீம் விட்டேஸ்வராய நமஹ ‘

இந்த மந்திரத்தின் பொருள்

செல்வத்தின் கடவுளான தீய சக்திகளை அழிக்கும் குபேரா உன்னை வணங்குகிறேன் ‘. உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் நீங்க விரும்பினால் காலை நேரத்தில் தியானம் செய்யும் நிலையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

அப்படி கூறினால் உங்கள் வாழ்க்கையில் விரைவில் பணக்கஷ்டம் விலகுவதை உணருவீர்கள்.

நீங்கள் ஆசைபடும் வாழ்க்கையை மனதில் நினைத்து கொண்டே மந்திரத்தை கூறுங்கள்.

குபேர மந்திரம்

‘ ஓம் யக்ஷயா குபேராய வைஷ்ரவனாய தனன்யாதிபதியே தனன்ஷ்யமரிதம் மே தேஹி தாபய சுவாஹா ‘ இந்த மந்திரம் உங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும்.

தூய்மையான பக்தியுடன் இந்த மந்திரத்தை கூறும்போது குபேரர் உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றுவார்.

மேலும் இந்த மந்திரம் உங்கள் தன்னம்பிக்கையையும், சமூகத்தில் உங்கள் மதிப்பையும் அதிகரிக்கும்.

மஹாலக்ஷ்மி குபேர மந்திரம்

‘ ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை சே வித்மஹே விஷ்ணு பத்தினியாய சே தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத் ஓம்’ இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நீங்கள் மகலக்ஷ்மியிடம் மகிழ்ச்சியான வாழ்வை கேட்கிறீர்கள்.

குபேரரும், மஹாலக்ஷ்மியும் நீங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் நிறைவேற்றுவார்கள்.

குபேர அஷ்ட – லக்ஷ்மி மந்திரம்

‘ ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ரீம் ஷ்ரீம் குபேராய அஷ்ட – லக்ஷ்மி நம க்ரிஹே தனம் புராய புராய நமஹ ‘ இந்த மந்திரத்தின் மூலம் குபேரரிடம் வற்றாத செல்வத்தையும்,வளமான வாழ்வையும் பிரார்த்திக்கிறீர்கள்.

லக்ஷ்மி தேவியுடன் சேர்த்து வணங்கும் போது குபேரர் உங்களுக்கு சிறந்த ஆசிகளை வழங்குவார் .

செல்வத்திற்கான குபேர மந்திரம்

‘ இன் ஷ்ரீம் க்ரிம் ஓம் குபேர லக்ஷ்மி கம்லா தேவநேய தான் கார்ஷினியையே ஸ்வாஹா ‘ இந்த மந்திரம் உங்கள் வேலைகளில் வெற்றியை பெற்றுத்தரும்.

இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கூறிவந்தால் குபேரர் உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் உள்ள தடங்கல்களை நீக்குவார்.

அதன்மூலம் அவரின் ஆசியோடு நீங்கள் விரும்பும் வளமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

குபேர தன பிராப்தி மந்திரம்

‘ ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்ளீம் ஷ்ரீம் க்ளீம் வித்தேஸ்வராய நமஹ ‘ இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கூறும்போது உங்களுக்கு செல்வமும்,புகழும் கிடைக்கும்.

உங்களுக்கு எந்தவிதமான பணக்கஷ்டமும் வராது, உங்கள் எதிரிகளால் உங்களை ஒன்றும் செய்ய இயலாது.

உங்கள் வேலையில் இலாபங்கள் கிடைக்க இந்த மந்திரத்தை கூறவும்

லக்ஷ்மி குபேர மந்திரம்

‘ ஓம் ஸ்ரீம ஹ்ரிம் க்ளீம் இங் சவுங் ஓம் ஹரிம் கா ஈ லா ஹ்ரிம் ஹா சா கா லா ஹ்ரிம் சகல் ஹ்ரிம் சவுங் இங் க்ளிம் ஹ்ரிம் ஸ்ரீ ஓம் ‘ இந்த மந்திரம் பிஜா மந்திரங்களின் தொகுப்பு ஆகும்.

இந்த மந்திரம் உடனடி பலன்களை கொடுக்கும், எனவே இந்த மந்திரத்தை தினமும் கூற வேண்டியது அவசியம்.

மேலும் லக்ஷ்மி, சரஸ்வதி, காளி போன்ற துர்கா தேவியின் பத்து அவதாரங்களின் பெயர்களையும் கூறுங்கள்.

உங்களின் முழுக்கவனமும் கடவுளை பற்றிதான் இருக்கவேண்டும்.

வழிமுறைகள்

குபேர மந்திரத்தை கூறும்போது நீங்கள் விரும்பும் பலன் கிடைக்க 21 நாட்கள் 108 முறை தொடர்ந்து கூற வேண்டும்.

தேவைப்பட்டால் ஜெபமாலையை கூட பயன்படுத்தலாம்.

பூஜை செய்யும்போது தாமரை மலர்களை பயன்படுத்துவது கூடுதல் சிறப்பாகும்.

Related Articles

Back to top button