இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு தற்போது விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு..

பாடசாலை மாணவர்களுக்கு தற்போது விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு..

யாழ்.பாடசாலைகளுக்கு இன்று (09) செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் யாழில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது” என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button