ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமானது, மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டிராத, ஒரு இடத்தில் நடந்த தனிமையான சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே பாகிஸ்தானில் வசிக்கும் ஏனைய இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களோ அச்சம் கொள்ளத்தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் தொடர்பில் பாகிஸ்தானின் முப்படைத் தளபதி தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும், 200 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு அதிக பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்நாட்டு அரசாங்கம் உள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இதற்கமைய, தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button