இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கியமான அறிவித்தல்..

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கியமான அறிவித்தல்..

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஒரு மாதம் ஆகும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்படும் இவ்வேளையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமானதல்ல என தமது ஆணைக்குழுவின் அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button