இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று முதன் முதலாக அதிக நேரம் மின் வெட்டு. வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். முழுமையானவிபரம் உள்ளே..

இலங்கையில் இன்று முதன் முதலாக அதிக நேரம் மின் வெட்டு.
வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
முழுமையானவிபரம் உள்ளே..

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று 10 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 12 வரையான காலப் பகுதிக்குள் இந்த 10 மணிநேர மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலமும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button