இன்றைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின் வெட்டு. முழுமையான விபரம் உள்ளே..
இன்றைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின் வெட்டு.
முழுமையான விபரம் உள்ளே..
இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
அதற்கமைய, நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் மாலை 7 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரை ஒன்றரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நண்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.