அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா!!
அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா!!
அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைந்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்
அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.
இந்த நிலையில், சிலர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகக்கூடுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தமது அமைச்சு பொறுப்புகளில் இருந்து இராஜினாமா செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக வில்லை எனவும், நாளை தினத்தில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்குக்கு மத்தியில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல தரப்பும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளன
அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தங்களின் அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதன்படி, பெரும்பான்மை கொண்ட இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
நன்றி – Capital News