அரிசியின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
அரிசியின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
பொதுச் சந்தையில் ஒரு கிலோ அரிசியின் குறைந்தபட்ச விலை தற்போது 200 தொடக்கம் 240 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்திருந்தது.
இருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி தேவையை பூர்த்தி செய்யவில்லை என விற்பனை நிலையங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில் பல பாகங்களிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, காய்ந்த மிளகாய் மற்றும் ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று கம்பஹா கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ உள்ளூர் நாட்டு அரிசி 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசியை இறக்குமதி செய்து அல்லது கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.