எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறதா??? நிதி அமைச்சரின் முக்கிய அறிவித்தல்..
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறதா???
நிதி அமைச்சரின் முக்கிய அறிவித்தல்..
எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மீள் கட்டமைப்பு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படுவதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறியுள்ளார்.
எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவையும் அரசாங்கம் கோரும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று வொஷிங்டன் செல்லவுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி நிதி அமைச்சர் தலைமையிலான குழு வொஷிங்டன் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சர்வதேச கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நன்றி – Capital News