புத்தாண்டை முன்னிட்டு லிட்ரோ எடுத்த அதிரடி தீர்மானம்..
புத்தாண்டை முன்னிட்டு லிட்ரோ எடுத்த அதிரடி தீர்மானம்..
நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவுகின்ற நிலையில், இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மூடப்பட்டிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் ஐந்து தினங்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கெரவலபிட்டி மற்றும் முத்துராஜவெல ஆகிய முனையங்களிலிருந்து சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழ் சிங்கள புதுவருட காலத்தில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடுகள் ஏற்படாது என குறித்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பின்னரான காலப்பகுதியில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடுகள் நிலவும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.