இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முன் அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு…

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முன் அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு..

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக கூறி செயற்பொறியாளர் அலுவலகத்தை மக்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் மின் வெட்டு இடம்பெறுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தியுற்ற பகுதிகளிலும் முன் அறிவிப்பு இல்லாமல் மின் தடை ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளானர்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்களும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

நன்றி. புதிய தலைமுறை

Related Articles

Back to top button