சினிமா

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்.

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்.

83 வயதாகும் ரங்கம்மா பாட்டி உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.

எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்

மேலும் இவர் வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர்.

இவர் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.

அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அன்னூர் தெலுங்குபாளையத்தில் இறுதிச்சடங்கு இன்றே நடைபெறுகிறது.

Related Articles

Back to top button