ஆன்மிகம்

உங்க கையில் இந்த ரேகை இருக்கா? அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக காத்திருக்காம்..

உங்க கையில் இந்த ரேகை இருக்கா? அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக காத்திருக்காம்..

கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும்.

இது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் உலகின் எல்லா பாகங்களிலும் காணப்படுகிறது.

சாஸ்திரங்களின் படி நமது எதிர்காலம் பற்றிய பல ரகசியங்கள் நமது கைகளிலேயே உள்ளது என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் நமது கையில் இருக்கும் ரோகைகள் நமக்கும் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டம் தர கூடியது.

அதில் நமக்கு அதிர்ஷ்டத்தை தர கூடிய ரேகைகள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.

மணிபந்த ரேகை : மணிபந்த ரேகை என்பது உள்ளங்கைக்கும், கைக்கும் இடையே இருக்கும் கோடாகும்.

சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறியுள்ள படி மணிபந்த ரேகை என்பது வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அறிகுறியாகும்.

அதேசமயம் இது உங்களுக்கு காத்திருக்கும் அழிவை பற்றியும் கூறும்.

மணிபந்த ரேகையில் இருந்து கிளை ரேகையானது தொடங்கி உங்கள் கைரேகையின் மேடு வரை சென்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாருமில்லை.

நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக காத்திருக்கும். ஒருவேளை இறந்து கோடுகள் இருந்தால் உங்கள் வருமானம் திடீரென இரட்டிப்பாகும்.

ஆயுள் கோடு :
உங்கள் மணிபந்த ரேகையிலிருந்து கோடானது உங்கள் ஆயுள்ரேகையை தொட்டால் உங்கள் எதிர்காலம் வெளிநாடுகளில் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த அதிர்ஷ்ட ரேகை கையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் மிக சிறிய வயதிலேயே கிடைத்துவிடும். செல்வத்திற்கும் எந்த குறையும் இவர்கள் வாழ்வில் இருக்காது.

இதய ரேகை :

உங்களுடைய மணிபந்த ரேகை இதய கோட்டை தொடும்படி இருந்தால் அது நீண்ட புகழுக்கும், நிலையான செல்வத்திற்குமான அடையாளமாகும். இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு கூட்டு தொழில் அமோகமாக இருக்கும். வெற்றியும், புகழும் இவர்களை தேடிவரும்.

சூரியமேடு :

உங்கள் மணிபந்த ரேகையில் இருந்து செல்லும் கோடு சூரிய மேட்டில் சென்று முடிவடைந்தால் இது அரசியலில் ஏற்படும் வெற்றிக்கான அடையாளமாகும்.

உங்களுக்கு அரசியலில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் இருக்கும். ஆனால் நீங்கள் எந்த துறையில் நுழைந்தாலும் அதில் உங்கள் கால்தடத்தை வலுவாக பதிப்பீர்கள்.

குருமேடு :

மணிபந்த ரேகையிலிருந்து செல்லும் கோடு குருமேட்டை சென்று அடைந்தால் உங்கள் தொழிலில் நீங்கள் உச்சத்தை அடப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

மிகச்சிறிய வயதிலேயே நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். உங்களை விட வயதில் மூத்தவர்கள் மீது நீங்கள் காதலில் விழ வாய்ப்புள்ளது. மற்றவர்களை உங்களை ஏற்றுக்கொள்ள வைக்க நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.

Related Articles

Back to top button