இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதான நகரங்களில் எரிவாயு விநியோக நடவடிக்கையினை இன்றைய தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவிருந்த எரிவாயு கப்பலை இன்று பிற்பகல் நாட்டுக்கு

வரவழைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ள கப்பல் மற்றும் எதிர்வரும் 14 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ள கப்பல்

ஆகியவற்றுக்கு 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

நன்றி – CAPITAL NEWS

Related Articles

Back to top button