மருத்துவம்

இனி கொசுக்களை விரட்ட 1 நிமிடம் போதும்!!! கொசு பேட் மற்றும் கெமிக்கல்கள் வேண்டாம்

இனி கொசுக்களை விரட்ட 1 நிமிடம் போதும்!!! கொசு பேட் மற்றும் கெமிக்கல்கள் வேண்டாம்

வீடுகளில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது இந்த கொசுக்கள் இதை விரட்ட கொசு கெமிக்கல்கள்

, கொசு பத்தி மற்றும் கொசு பேட்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.

இதனால் சரும பிரச்சனைகள் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதுமட்டும் இல்லாமல் நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது போன்ற கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம்.

இதன் மூலம் கொசுக்களை விரட்டுவது மட்டுமில்லாமல் நமது உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தாது. இத்தகைய வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம்

இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் வழிமுறைகள்

தேங்காய் நார்
பொதுவாக தேங்காய் நார் வீடுகளில் அதிகமாக பயன்படுத்துவதில்லை.அதை வீடுகளில் பாத்திரம் துலக்க மட்டும் பயன்படுகிறது.இந்த தேங்காய் நார்கள் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது எப்படி தெரியுமா?? காய்ந்த தேங்காய் நார்களை எரித்த பின் அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டும்.இந்த நார்கள் கடைகளிலும் கிடைக்கிறது.மாலை நேரத்தில் கொசுக்கள் இருக்கும் ரூம்களில் அந்த நார்களை எரித்து புகைகளை காண்பித்து பாருங்கள் ஒரு கொசு கூட இருக்காது.

கற்பூரம்
அறிவியல் ரீதியாக கொசுக்கள் அழிவதற்கு முக்கிய காரணம் சல்பர்.இந்த சல்பர் எங்கு இருந்தாலும் கொசுக்கள் வராது.இந்த கற்பூரம் சல்பரினால் ஆனது ஆனால் ஒரு பிரச்சினை இதை காற்றில் வைத்தால் கரைந்து விடும். கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீட்டில் காண்பிக்கும் போது கொசுக்கள் வராது அல்லது கற்பூரத்தை ஒரு பாத்திரத்தில் ஒரு சொட்டு நீர் விட்டு வைத்தால் அந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.

கெரோசின் மற்றும் கற்பூரம்
கொசுக்களை அழிக்க இந்த இரண்டு பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.கொசுகளை விரட்ட கடைகளில் விற்கும் மிசின்களின் காலியான டப்பாவில் கெரொசின் மற்றும் சிறிது கற்பூரம் சேர்த்து பிளக்கில் மாட்டி விட வேண்டும்.இதனால் வீட்டில் கொசுக்கள் வராது மற்றும் உடல் நலத்திற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Related Articles

Back to top button