பூனை குறுக்கே சென்றால் நல்லதா..? கெட்டதா..? பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என சொல்லுவதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
பூனை குறுக்கே சென்றால் நல்லதா..? கெட்டதா..?
பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என சொல்லுவதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
முன்னோர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் அவர்கள் பின்பற்றிய செயலுக்கும் ஏதாவது ஓர் அர்த்தம் இருக்கும் என கூறுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் அதற்கான உண்மையான அர்த்தங்கள் நம்மில் யாருக்கும் தெரிவதில்லை.
அந்த வகையில் பொதுவாக நாம் வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம் என பலரும் கூறுவார்கள் அதையே நாம் அனைவரும் பின்பற்றி வருகிறோம்.
உன்மையிலேயே அப்படி பூனை குறுக்கே சென்றால் அது கெட்ட சகுனம் தானா? அதற்கு உன்மையான அர்த்தம் தான் என்ன?…
மன்னர் காலத்தில் போருக்கு படையுடன் செல்லும் போது வழியில் பூனையை பார்த்தல் அவ்வழியாக செல்ல வேண்டாம் என கூறுவார்களாம்.
ஏனென்றால், பூனை செல்லும் அந்த வழியில் நிறைய குடியிருப்புகள் இருக்கும் எனவும், அங்குள்ள ஆண்மகன்கள் போருக்கு சென்றிருப்பார்கள் எனவும் கருதுவார்களாம்.
இத்தகைய சூழ்நிலையில் அந்த பகுதியில் சென்றால் நிறைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் அந்த திசையில் செல்லாமல் வேறு திசையில் செல்வார்களாம்.
இதனால் தான் பூனை குறுக்கே சென்றால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் அப்படி கூறியிருக்கிறார்கள்.
இப்படி முன்னோர்கள் கூறியது பிற்காலத்தில் மூடநம்பிக்கையாக மாற்றப்பட்டுவிட்டது.