ஆன்மிகம்

பெண்களே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்! துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் தரித்தரம் உண்டாகுமாம்…

பெண்களே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்!
துடைப்பத்தை இப்படி வைத்தால் வீட்டில் தரித்தரம் உண்டாகுமாம்…

வீட்டில் பயன்படுத்தக்கூடிய மற்றும் வீட்டை சுத்தப்படுத்தக்கூடிய முக்கியமான பொருட்களில் ஒன்று துடைப்பம்.

துடைப்பத்தில் மகாலட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதிகம். அப்படிப்பட்ட துடைப்பத்தை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமான ஒன்று.

துடைப்பத்தை வைக்க சில விதிமுறைகள் உள்ளன. அதன்படிதான் வைக்கவேண்டும்.

துடைப்பத்தை குடும்ப பெண்கள் பயன்படுத்தும்போது துடைப்பம் அதிக விலையாக உள்ளது,

விரைவில் தேய்ந்துவிடும் என்பதற்காக தலைகீழாக வைப்பார்கள். அதாவது கைப்பிடியை தரையிலும்,கூட்டக்கூடிய பகுதியானது மேலற்புறமாக இருக்கும்படி வைப்பார்கள்.

இப்படி ஒருபோதும் வைக்கக்கூடாது.இப்படி வைத்தால் தரித்தரம் உண்டாவதோடு,வீட்டின் செல்வ செழிப்பும் குறைந்துவிடும்.

வீட்டிற்குள் கூட்ட ஒரு துடைப்பமும், வீட்டின் வெளியே அதாவது தலைவாசலை கூட்ட வேறொரு துடைப்பமும் பயன்படுத்த வேண்டும்

நீங்கள் உபயோகிக்கும் அனைத்து துடைப்பங்களையும் ஒரே இடத்தில் ஒன்றாக போட்டு வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் வீட்டில் ஒற்றுமை இல்லாமல் போய்விடும்.

துடைப்பத்தை எப்பொழுதும் காலால் மிதிக்கக்கூடாது. பெருக்கும்போது சில சமயம் துடைப்பத்தில் தலைமுடி அல்லது நூல் மாட்டிக்கொள்ளும்.அதை கைக்கொண்டே அகற்றவேண்டும். காலில் மிதித்து அகற்றுவது தவறு.

வீட்டிற்கு வரக்கூடியவர்கள் துடைப்பத்தை பார்க்காதவண்ணம் மறைவான இடத்தில் போட்டு வைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் துடைப்பத்தை படுக்கவைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டின் பணப்புழக்கமும் படுத்துவிடும் என்று கூறுவார்கள்

பிளாஸ்டிக்கில் உள்ள துடைப்பத்தை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். மேற்கூறியபடி துடைப்பத்தை பயன்படுத்தினால் உங்களின் வீட்டில் ஒற்றுமை ஓங்கும், பணப்புழக்கம் அதிகரிக்கும் .மேலும் தரித்தரம் நீங்கும்.

Related Articles

Back to top button