ஆன்மிகம்

வீட்டில் மணிபிளான்ட் இருந்தும் பணக்கஷ்டம் இருந்தால். தண்ணீரோடு சேர்த்து இதையும் அந்த மணிபிளான்ட்டுக்கு ஊற்றுங்கள். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்..

வீட்டில் மணிபிளான்ட் இருந்தும் பணக்கஷ்டம் இருந்தால்.
தண்ணீரோடு சேர்த்து இதையும் அந்த மணிபிளான்ட்டுக்கு ஊற்றுங்கள்.
பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்..

உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் நிச்சயம் பால் போல பொங்கி வழியும்

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய வாஸ்து ரீதியாக இந்த மணி பிளான்ட் செடியை நம் வளர்க்கின்றோம்.

சில பேருக்கு இந்த மணிபிளான்ட் செடி ராசியாக அமைந்து இருக்கும். மணி பிளான்ட் செடியை வைத்த பின்பு வீட்டினுடைய நிதி நிலைமையில் நிச்சயமாக மாற்றம் தெரிந்திருக்கும்.

அந்த மணிபிளான்ட் செடி வீட்டில் செழிப்பாக வளரவும் செய்யும்.

ஆனால் சில பேருக்கு மணி பிளாண்ட் செடியை வீட்டில் வைத்து வளர்த்தும் பணப் பற்றாக்குறை உள்ளது.

வீட்டின் வறுமைக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்றால் வேறு என்ன செய்யலாம்.

அதற்கு ஒரு மாற்று பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மணி பிளான்ட் செடியை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து இருந்தால், அதை மண் தொட்டியில் மாற்றிக் கொள்ளுங்கள்.

மண் தொட்டியில் செடி வைப்பது மிகவும் விசேஷம்.

இந்த மண்ணிற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டும். தினமும் செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, ‘ஓம் ஸ்ரீம் ஓம்’ வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும்.

என்ற வார்த்தையை சொல்லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மணிபிளான்ட் செடியில் பால் கலந்த தண்ணீரை ஊற்றி பாருங்கள்.

ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றுவதாக இருந்தால், அந்தத் தண்ணீரில் 2 ஸ்பூன் காய்ச்சாத பாலை கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த தண்ணீரை மணி பிளாட் செடிக்கு அபிஷேகம் செய்வதாக நினைத்து தண்ணீரை ஊற்றுங்கள்.

வெள்ளிக்கிழமை இந்த பால் கலந்த தண்ணீரை ஊற்றும் போதும் ‘ஓம் ஸ்ரீம் ஓம்’ எங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்ற மந்திரத்தை சொல்லி தண்ணீரை ஊற்றினால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பால்போல நிச்சயம் பொங்கிவழியும்.

உங்கள் வீட்டிற்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு மனதார நினைத்து கொண்டே பால் கலந்த இந்த தண்ணீரை மணிபிளான்ட் செடியில் ஊற்றி விடுங்கள்.

செடி என்பது உயிருள்ள ஒரு ஜீவன் தான். அதிலும் இந்த மணிபிளான்ட் செடி வாஸ்து ரீதியாக நமக்கு பணவரவை கொடுக்கக்கூடிய செடி.

அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய செடி. நிச்சயமாக நீங்கள் சொல்லுவது அந்த செடிக்கு கேட்கும்.

வாய்விட்டு மந்திரத்தை சொல்லி பணவரவு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும் எந்த தவறும் கிடையாது. (வெள்ளிக்கிழமை மட்டும் பால் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். மற்ற நாட்களில் சாதாரண தண்ணீரை ஊற்றினால் போதும்.

நாம நினைப்பது தான் நடக்கும். நல்லதே நினைத்து நாம் செய்யும் ஒரு நல்ல காரியமும் என்றைக்குமே நமக்கு தீங்கை கொடுக்காது.

மனதில் எதிர்மறையான சிந்தனைகளை வைத்துக்கொண்டு நாம் ஒரு நல்லதை செய்தால் கூட அது தீமையில் முடிவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

தூய்மையான எண்ணமும் களங்கமில்லாத மனம் இருந்தாலே போதும். நல்லது நம்முடனே இருக்கும். மேல் சொன்ன பரிகாரத்தை நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி – தெய்வீகம் 🙏🙏

Related Articles

Back to top button