இலங்கை செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில்தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில்தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை நேற்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை

மட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அத்துடன் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button