இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், 3,950 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய குறித்த கப்பல் கடந்த வார இறுதியில் நாட்டை வந்தடைந்த நிலையில் அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன

இதனடிப்படையில், நேற்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது. அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button