மருத்துவம்

இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சு!!! எவ்வளவு பெரிய தழும்பா இருந்தாலும் மறைக்கும் சக்தி இந்த ஒரே ஒரு பொருளுக்கு உண்டு….!

இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சு!!!
எவ்வளவு பெரிய தழும்பா இருந்தாலும் மறைக்கும் சக்தி இந்த ஒரே ஒரு பொருளுக்கு உண்டு….!

எல்லாப்பழங்களிலும் ஒரு தனித்துவ தன்மையுள்ளது. அதிலும் ஆரஞ்சு பழம் அழகுக்கி சிறந்து விளங்குகிறது.

வசீகர தோற்றம் கொண்ட இந்த பழம், உடலையும் வசீகரமாக வைத்திருக்க உதவுகிறது.கண்களை ப்ளிச் என வைத்திருக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தை பிழிந்து, ஜீஸாக எடுக்கவும் , அதை பிரிட்ஜில் வைத்து ஜஸ் கட்டியாக்கவும், கட்டியான பின் ஒரு வெள்ளை துணியொன்று எடுத்து, இதில் ஜஸ் கட்டியை வைத்து கட்டி கண்ணுக்கு மேல் வைத்து ஒத்தி எடுங்கல், ஒரு விட்டு ஒரு நாள் செய்து வர , கண்கள் ப்ளிச் ஆகிவிடும் .

நம் கண்களுக்கு சரியான தூக்கம் இல்லாவிடின், சோர்வு ஏற்படும். அந்த சோர்வை நீக்க இவ்வாறு செய்யவும்.

தலைமுடி வறண்டு போயிருந்தால், அதை ஜொலிக்க வைக்க, இது உதவுகிறது. அதாவது ஆரஞ்சு தோலை உலர்த்தி, அதோடு வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றிலும் 100கிராம் எடுத்து, மிஸினில் கொடுத்து அரைத்து வைக்கவும் .

இந்த பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

முகத்தில் பருக்கள் வருவதால் , தழும்புகள் ஏற்பட்டிருக்கும் , இது மறையாமல் அழகை கெடுக்கும், இதற்கு ஆரஞ்சு பழம் சிறந்தது.

ஆரஞ்சு தோலை விழுது போல் அரைத்து கால் டீஸ்பூன், கசகசா விழுது 1டீஸ்பூன், சந்தன பவுடர் 2சிட்டிகை எல்லாவற்றையும் சேர்த்து, இறுக்கமாக அரைக்கவும் , இதை தினம் இரவு தூங்குவதற்கு, முதல் பூசி காய்ந்ததும், கழுவி விட்டு தூங்கலாம்.

இப்படி செய்வதால் பருக்களால் ஏற்பட்ட தழம்புகள் மறைந்து விடும்.

சிலருக்கு முகத்தில் திட்டு திட்டாக கருமை படிந்து இருக்கும், அதற்கு வேப்பங்கொழுந்துடன், ஆர்ஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, கருமை படர்ந்திருக்கும் இடமெல்லாம் பூசினால், கருமை மறைந்து விடும்.

இதனை வாரம் 2முறை செய்தால் போதும்.

தலை சுத்தமாக இல்லாவிட்டால், தலையில் அரிப்பை ஏற்படுத்தும், அதை சரிசெய்ய உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ. அனைத்தையும் சேர்த்து அரைத்து வாரம் 2முறை தலையில் போட்டு மசாஜ் செய்து குளித்தால் தலைமுடி சுத்தமாகிவிடும்.

முகத்தில் சுருக்கம் விழுந்தால், சுருக்கத்தை விரட்ட ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி, பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து, தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

Related Articles

Back to top button