இந்திய செய்திகள்

திண்டிவனம் பகுதியில் குளிர்பானம் குடித்த சிறுவன் திடீர் உயிரிழப்பு. ஓடும் பேருந்தில் தாயின் மடியில் உயிரைவிட்ட பரிதாபம்..

திண்டிவனம் பகுதியில் குளிர்பானம் குடித்த சிறுவன் திடீர் உயிரிழப்பு.
ஓடும் பேருந்தில் தாயின் மடியில் உயிரைவிட்ட பரிதாபம்..

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின்ராஜ் இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெபஸ்டின்ராஜின் என்பவரின் மணைவி பொற்செல்வி இவர்கள் இருழருக்கும் 16 வயதில் அனுசுயா என்ற பெண் பிள்றையும் 14 வயதில்
ஆன்டனிஜான் ரோஷன் ஆண் பிள்ளையும் உள்ளனர்.

பொற்செல்வி தனது குடும்பத்துடன் தாய் ஊரில் இடம்பெற்ற திருவிழவிற்று இருந்த நிலையில் நேற்று முன் தினம் அரசு பேருந்து மூலம் தமது ஊரிற்கு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும் போது மதுரை அருகே அழகாபுரி என்ற ஊரில் உள்ள ஓட்டலில் பஸ் நிறுத்தப்பட்டது
பொற்செல்வி தனது மகன் ஆன்டனிஜான் ரோஷனுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார்
குளிர்பானத்தை குடித்த மகன் 4 முறை வாந்தி எடுத்துள்ளார்.

இதனால் சோர்வடைந்த மகனை தாய் தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அந்த பேருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு வந்தபோது, டிரைவர் டீ குடிப்பதற்காக சாலையோர ஓட்டலில் பஸ்சை நிறுத்தினாா்.

அப்போது தாய் தனது மகனை டீ குடிப்பதற்காக எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனால் ஆதிர்ந்துபோன தாய் பொதுமக்களின் தனது மகனை வைத்தியசாலை கொண்டு சென்று உள்ளார்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த வைத்தியர்கள் மகன் ஏற்கவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

தாய் குடுத்த புகாரின் பேரில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி – தினத்தந்தி

Related Articles

Back to top button