ஆன்மிகம்

S , T என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா? உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்…

S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்…!

குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம்…

அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளாக கருதப்படுகிறது.

இவற்றிலும், உங்களது பெயர் S-ல் ஆரம்பித்தால் என்னவென்று கீழே பார்க்கலாம் வாங்க.s என்ற எழுத்து எண் கணிதப்படி பார்க்கும் பொழுது, எண் 1ற்கு இணையானது. s என்ற எழுத்தை முதலெழுத்தாக ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் தலைவர்களாக மட்டுமல்ல அனைத்து செயல்களிலும் மிகவும் சிறப்பாக விளங்க கூடியவர்.

மேலும், அவர்களின் குணாதிசியங்களை ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்

உறவுகளில் உண்மையாக இருப்பர்:ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.

தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர்.

உணர்வுகளை மறைப்பார்கள்:இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.

இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.

மிகவும் கவர்ச்சிகரமான வர்கள் இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகம் சந்தோஷமும் கொள்வார்கள், துன்பமும் கொள்வார்கள்.

இவர்களது கவர்ச்சிகர மான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.

நம்பத் தகுந்தவர்:இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள்.

இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சி வசப்படுவார்கள்.

சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.

இரக்கமுடையவர்:‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர் களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.

இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.

விசுவாசமானவர்கள்:இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர்.

இத்தகையவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது.

வார்த்தைகளால் அன்பை வெளிக் காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.வெற்றிகரமான தொழில்:இத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதி யாகவோ இருப்பர்.

 

T என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்

உங்களுடைய எழுத்து T என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா ? உங்களுடைய பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி கூறும் 10 உண்மைகள்.

உங்களுடைய பெயரின் முதல் எழுத்து T என்ற எழுத்தில் ஆரம்பித்தாள் உங்கள் வாழ்க்கை முறையில் உள்ள தத்துவங்களை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

அனைத்து செயல்களிலும் நன்கு தெரிந்தவர் போல் செயல்படுவீர்கள்

மிகவும் அழகான தோற்றம் அளிக்ககூடிய நீங்கள் இயற்கையான முறையில் பிறரை ஈர்த்து விடுவீர்கள்.

புதிய அனுபவங்களை மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் நீங்கள் ஒரு சில சமயங்களில் முடிவை எடுக்கும்போது அதனைப் பற்றி மிகவும் தெரிந்தது போல செயல்படுவீர்கள்.

எல்லோரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

புத்திசாலித்தனமாக செயல்படும் நீங்கள் மிகவும் கற்பனைத்திறன் உடையவர்களாகவும் காணப்படுவீர்கள்.

பிறரிடம் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

உங்களின் இனிய வார்த்தைகளாலேயே பிறரை விரைவில் ஈர்த்துவிடும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

உங்களின் வாழ்க்கையை மேம்படுத்த நல்ல துணை தேவைப்படுகின்றது.

தனித்துவமான திறமை மூலம் பல செயல்களை செய்வீர்கள்

நீங்கள் செய்யும் செயல்கள் எதுவும் உங்களின் புகழை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வீர்கள்.

சிலவேளைகளில் உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் பகைவராக கருதுவீர்கள் இதனால் உங்களின் உறவில் விரிசல் ஏற்படும் ஏற்படலாம்.

 

Related Articles

Back to top button