ஆன்மிகம்

உங்கள் பெயர் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்றதா? உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம். நீங்கள் இப்படித்தான் இருப்பீர்களாம். நீங்களும் இப்படியா..?

உங்கள் பெயர் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்றதா?
உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்.
நீங்கள் இப்படித்தான் இருப்பீர்களாம்.
நீங்களும் இப்படியா..?

பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதையும், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய என்ன என்பதை பார்ப்போம்.

A என்னும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள்.

முன்பின் தெரியாதவர்கள் கூறுவதையோ, அவர்கள் செய்யும் செயல்களையே அவர்கள் எப்போதும் நம்பமாட்டார்கள்.

அவர்கள் மூளை சொல்வதை மட்டுமே அவர்கள் நம்புவார்கள். ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற மாட்டார்கள்.

ஏனெனில் அந்த விதிமுறைகளை எப்பொழுதும் உடைக்க வாய்ப்புள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். மற்றவர்களை நம்பும் முன் முதலில் அவர்களை பற்றி அலசி ஆராய்வார்கள்.

ஒருமுறை அவர்கள் தங்கள் இலக்குகளை தீர்மானித்து விட்டால் அதிலிருந்து அவர்கள் மாறவோ, பின்வாங்கவோ மாட்டார்கள். அவர்கள் இலக்குகளை முடித்த பின்னரே ஓய்வெடுப்பார்கள்.

இதற்கு காரணம் இவர்கள் தங்கள் இலக்கு மேல் கொண்டுள்ள உறுதிதான். இதனால்தான் இவர்களுக்கு தங்கள் மேல் உள்ள தன்னம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் சிலசமயம் அவர்களின் உறுதி அதிக பிடிவாதமாக மாறிவிடும்.

இவர்களின் மிகச்சிறந்த குணமே அவர்களுடைய பொறுமைதான். பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்கள் பெரும்பாலும் வழக்கத்தை விட பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.

அவர்களின் இலக்குக்காக போதுமான அளவு முயற்சியை வழங்கியபின் அதற்கான முடிவிற்காக பொறுமையாக காத்திருப்பார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் நல்ல முடிவுகள் சிறிது காலம் எடுக்குமென்று.

அவர்களிடம் நல்ல உணவு செய்கிறோம் என்று கூறிவிட்டால் அதற்க்காக தாரளமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள். சிலசமயம் இவர்களின் பொறுமை இவர்களுக்கு சோம்பேறி என்ற பெயரை பெற்றுத்தரும்.

நீங்கள் ஒருவரின் அமைதியை பார்த்து மிகவும் ரசித்தீர்கள் எனில் அவர்களின் பெயர் A என்னும் எழுத்தில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. ஆமாம் யாருடைய பெயரெல்லாம் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்கள் மிகவும் அமைதியான குணம் உடையவர்களாக இருப்பார்கள். மிகவும் குறைவாகத்தான் பேசவும் செய்வார்கள்.

உங்களை பற்றிய அனைத்து கணிப்புகளையும் அவர்கள் தங்கள் மனத்திற்குள்ளேய கணித்துவிடுவார்கள். ஆனால் அதனை வெளியில் கட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன் தெரியுமா அப்பொழுதுதான் நீங்கள் அவர்களை எளிதில் நம்புவீர்கள்.

இவர்களிடம் இருக்கும் மற்றொரு பாராட்டப்பட வேண்டிய குணம் திறந்த மனப்பான்மை ஆகும். அவர்கள் சமூகத்தை பற்றியோ, மற்றவர்களின் வெளித்தோற்றம் வைத்து அவர்களை கணிக்கமாட்டார்கள்.

அவர்கள்களுக்கென்று தனி கொள்கைகளும், கருத்துக்களும் இருக்கும். அவர்கள் கருத்துக்களில் மற்றவர்கள் தலையிடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். சிலசமயம் அவர்கள் தங்கள் துணைக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள், அதேசமயம் எளிதில் புரிந்து கொள்வபர்களாகவும் இருப்பார்கள்.

அதனால்தான் அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.

Related Articles

Back to top button