பர்ஸ் முட்ட முட்ட பணம் சேரணுமா? அப்ப இந்த ஒரு பொருளை எப்போதும் வைத்து இப்படி செய்து பாருங்கள் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
பர்ஸ் முட்ட முட்ட பணம் சேரணுமா? அப்ப இந்த ஒரு பொருளை எப்போதும் வைத்து இப்படி செய்து பாருங்கள் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
நம்மில் பெரும்பாலானவர்கள் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள்.
மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்.
அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான்.
கையில வாங்குனேன் பையில போடலே… காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள். எப்பவும் பர்ஸ் நிறைய பணம் இருக்கணுமா? இதை படிக்கவும்.
நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது.
என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது
நாம் வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவே கூடாது. நம்முடைய மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும்.
நாம் வைத்திருக்கும் பர்ஸில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்றால், அதை முறையாக பராமரிப்பது அவசியமாகும்.
மேலும் நாம் வைத்திருக்கும் பர்ஸும் அழகாகவும், பணத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கவேண்டியது அவசியமாகும்.
அதற்கு நாம் வாங்கும் பர்ஸானது அழகிய பச்சை வண்ணம், பர்ப்பிள், நேவி ப்ளூ, பிங்க் போன்ற நிறங்களில் இருக்க வேண்டியது அவசியம்.
அப்படி இருந்தால் பர்ஸில் பணம் எளிதில் சேரும். மேலும் நாம் வாங்கும் பர்ஸும் ரூபாய் நோட்டுக்கள் கசங்காமல் எளில் நுழையும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்.
பச்சை நிற பட்டுத்துணியில் ஏலக்காய்
பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, பச்சைக் கற்பூரம் போட்டு கட்டி அதை பர்ஸில் வைத்துக் கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.
கூடவே நம்மை கடன் வாங்குதில் இருந்து தப்பிக்க வைக்கும்.
கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயம்.
ஒருவேளை நாம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் அந்த கடனை அடைக்கும் வகையில் நம்முடைய பர்ஸில் பணம் சேர்ந்துவிடும்.