ஆன்மிகம்

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? நீங்க இந்த பொருட்ளை வைத்து ஒரு முறை இப்படி செய்தால் போதும் குபேரரின் மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? நீங்க இந்த பொருட்ளை வைத்து ஒரு முறை இப்படி செய்தால் போதும் குபேரரின் மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

நம்மில் பலரும் வருமானம் குறைந்தவர்களாக, வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்து கொண்டே இருக்கிறோம்.

அப்படி கஷ்டப்பட்டவர்கள் இனிமேல் பணவரவு இல்லாத கஷடத்தை அனுபவிக்க தேவையே இல்லை.

அவற்றிலிருந்து மீண்டுவர இந்த வழிமுறைகளை செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இது மிகவும் எளிய முறையில் செய்யப்படும் பரிகாரங்கள் ஆகும்.

சங்கு
எத்தகைய வாஸ்து தோஷங்களாக இருந்தாலும் அந்த தோஷத்தை நிவர்த்திச் செய்யக்கூடிய சக்தி சங்குக்கு உண்டு.

லட்சுமி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களோ, சிலையோ வீட்டில் வைத்திருப்பது சிறப்புக்குரியது.

குபேரன் சிலை
குபேரன் சிலையை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடங்களிலும் வைத்திருக்க வேண்டும்.

குபேரன் சிலையை வீட்டில் எப்போதும் வடக்கு திசைப் பார்த்து வைத்திருக்க வேண்டும். இது தொழிலில் நல்ல லாபத்தை தரக்கூடியதாகும்.

கண்ணாடி
வீட்டில் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பது சிறந்ததாகும்.

குறிப்பாக கண்ணாடி தரையில் இருந்து 4 அல்லது 5 அடி உயரத்தில் வைக்க வேண்டும்.

கண்ணாடியானது சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும்.

குதிரைகள்
ஏழு குதிரைகள் ஓடும் படியாக உள்ள ஓவியமானது வீட்டில் வைத்திருந்தால், எதிர்மறை சக்திகள் வருவதைத் தடுத்து, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.

இது வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும்.

எனவே குதிரைகள் கொண்ட ஓவியங்களை வாங்கி வீட்டில் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக குதிரை ஓவியத்தை வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிடக் கூடாது. ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.

மாவிலைத்தோரணம்
வாஸ்து பகவானுக்கு பிடித்த இலையான மாவிலை, வாஸ்துவைச் சீராக்குகிறது.

மேலும், வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை நீக்கும், சுற்றுப்புற நச்சுக்காற்றை தூய்மையாக்கும்.

எனவே வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி ஆகும்.

பூக்கள்
உங்களது வீட்டில் தினமும் பிரெஷான பூக்களை பிளவர் பாக்சில் வைக்க வேண்டும். வாடிய பூக்களை வைக்கக்கூடாது.

செயற்கையான பூக்களையும் வைக்கக் கூடாது. இயற்கையான பூக்களாய் வைக்க வேண்டும்.

மணி பிளான்ட்
மணிபிளாண்ட் கொடியை வீட்டில் வளர்த்தால், செல்வா வளம் அதிகரிக்கும்.

அதேபோல் இந்த மணிபிளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பது மேலும் சிறப்பை தரும்.

குட்டை மூங்கில் மரங்கள்
குட்டை மூங்கில் மரங்களை வீட்டில் வளர்த்து வந்தால் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

இது ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தர வல்லது. இந்த குட்டை மூங்கில் மரங்களை இப்போது பலராலும் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.

கடிகாரம்
கடிகாரத்தை கதவின் மேல் தொங்கவிடக்கூடாது. கடிகாரத்தை வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக்கூடாது.

கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

ஒற்றைக்கண் தேங்காய்
ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டி தொங்கவிட்டு பூஜை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

பண வரவு அதிகரிக்கும். எதிர்மறை அதிர்வுகள் அனைத்தும் விலகும். அத்தகைய அபரிவிதமான சக்தி ஒற்றைக்கண் தேங்காய்க்கு உண்டு.

மேலும் வருமானம் பெருக இந்த பரிகாரத்தையும் செய்யுங்க, நல்ல ஒரு வித்தியாசத்தை உணருவீங்க.

உங்களது வீடு, பணிபுரியும் இடம் அல்லது உங்களது தொழிற்சாலையில் பணம் நிறைய சேர ஒரு சிறு சந்தன மரபெட்டியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் பெட்டியில்,
குங்குமம்
மஞ்சள்
வெற்றிலை
வில்வம்
துளசி
வன்னி
மல்லிகை
தாமரை

போன்றவற்றை பூஜித்து வைக்க வேண்டும். இதில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப்பணத்தை மறுநாள் எடுத்து மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், நமக்கு பணம் வந்து சேரும். அந்த பணம் பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

சந்தன மரப்பெட்டி வாங்க வசதியில்லாதவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கறுப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை அல்லது தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம்.

இதன் மூலம் நமக்கு வந்து சேரும் பணத்தை வீண் விரயமாகாமல் தற்காத்துக் கொள்ளலாம். மேலும் இழந்த பணம் அனைத்தும் திரும்ப வந்து சேரும். வருமானம் பன்மடங்காகப் பெருகும்.

நன்றி, ZIO TAMIL

Related Articles

Back to top button