மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்து இப்படி வளர்த்து பாருங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.
மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்து இப்படி வளர்த்து பாருங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.
மணி பிளாண்ட் செடியை வளர்த்தால், செல்வம் பெருகி, சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில் குடிக் கொள்ளும் என்பது நம்பிக்கை.
இதனால் பலரும் மணிபிளாண்ட் செடியை வளர்க்க ஆசைப்படுவார்கள், ஒரு சிலருக்கு மணி பிளாண்ட் செடி வளர்த்தாலும் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
செடியும் வாடி வதங்கி இருக்கும், இப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?
மணி பிளாண்ட் செடியை வாங்கி வந்துவிட்டு வீட்டில் அப்படியே வைத்துவிடக்கூடாது, தினமும் அதை கவனிக்க வேண்டும்.
தண்ணீர் ஊற்றும் முறை
மணி பிளாண்ட்டிற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதற்காக மண்ணில் புதைத்து வளர்க்கும் போது அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக்கூடாது.
ஆனால் மண் வறட்சியடையாதவாறு பார்த்துக் கொள்ள, தினமும் இரண்டு முறை தண்ணீரை ஊற்ற வேண்டும்.
அப்படி தண்ணீரை ஊற்றும் போது, ஒரு சில வார்த்தைகளை மனதார மணிபிளான்டிடம் பேச வேண்டும்,
நேர்மறையான வார்த்தைகளால் மணி பிளாண்ட் நன்றாக வளர ஆரம்பிக்கும், அப்படி பேசமுடியவில்லையெனில் “நன்றி” என வார்த்தையை கூறிக்கொண்டாவது தண்ணீர் ஊற்றலாம்.
வளர்ச்சிக்கு உதவுங்கள்
மிக முக்கியமாக மணி பிளாண்ட் செடி வேகமாக வளர வேண்டும்.
என ஆசைப்படும் நபர்கள், அதனை சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைப்பதற்கு பதிலாக, சற்று நிழலில் வைத்து வளர்ப்பது நல்லது.
இதன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு படர்வதற்கு ஏற்றவாறு கயிற்றை கட்டிவிட்டு, அந்த கயிற்றில் சுற்றிவிட்டால், அது கொடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
வாரத்தில் ஒருமுறையாவது செடியில் உள்ள இலைகளில் எல்லாம் ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை தெளித்து, அதில் தூசி இல்லாமல் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வறண்ட இலைகளை நீக்கவும்
இலைகள் வறண்டு போகும் போது அதனை நீங்கள் தான் வெட்டிவிட வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள், அயலர்கள் வெட்டினால் கூட நீங்களே உங்கள் செல்வத்தை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அர்த்தமாகிறது.
எனவே உங்கள் கையால் நீங்களே வறண்டு போன இலைகளை கத்தரித்து விடவும்.