ஆன்மிகம்

தீராத கடன் பிரச்சினை தீர செவ்வாய் கிழமையில் இந்த ஒரு பொருட்களை வைத்து நீங்கள் இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.

தீராத கடன் பிரச்சினை தீர செவ்வாய் கிழமையில் இந்த ஒரு பொருட்களை வைத்து நீங்கள் இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான்.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர்.

அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர்.

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும்.

நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர்.

கடன் தீர்க்கும் பைரவர்

அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம்.

கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம்.

பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.

அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும்.

பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.

தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

செவ்வாய்கிழமை பரிகாரம்

கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை.

இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கும் செவ்வாய் ஹோரை வருகிறது.

உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பின்பு 3 கை பிடி அளவு கல்லுப்பு தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது

காணாமல் போகும் கடன்
பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிறத் துணியில் 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிரம்ப கல்லுப்பைக் கிண்ணத்திலிருந்து எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும்.

மூன்று கைப்பிடி கல் உப்பை, உங்கள் கைகளால் எடுக்கும்போதும் ‘கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்.’

இவ்வாறாக மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து, ஒரு முடிச்சுப் போட்டு கட்டி இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும்.

ஒரு வாரம் வரை கல் உப்பை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருங்கள். மறு வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும்.

குறிப்பாக மஞ்சள் துணியில் கட்டி இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரையுங்கள்.

உப்பை கரைத்து இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பு போல சீக்கிரம் கரைந்து போகும்.

மிளகும் கல் உப்பும்

கறுப்பு மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு வெடிக்கிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் காணாமல் போய் விடும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை
செய்து பாருங்கள் கடன் பிரச்சினை படிப்படியாக காணாமல் போகும். அதிக பண வருமானமும் வரும்.

குங்குமம் பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குங்குமம் வாங்கி வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வர கடன் பிரச்சினை நீங்கும்.

தொடர்ந்து 11 வாரம் குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு கொடுத்து விட்டு வர வேண்டும்.

கடனாளியாக எழுவதை விட பட்டினியாக உறங்குவது மேல் என்று கூறுவார்கள்.

வேறு வழியின்றி கடன் பெற்றவர்கள் இந்த பரிகாரங்களை செய்து வாருங்கள் கடன் பிரச்சினை நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.

கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள்

திங்கட்கிழமை அன்று ருண விமோசனரை வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும். திருவாரூர், திருச்சேரை திருத்தளத்தில் ருண விமோசனரை வணங்கலாம்.

திருப்பதி ஏழுமலையானையும், திருஆவினன் குடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கினால் கடன் பிரச்சினை நீங்கும்.

திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். நம்முடைய கடன் சுமையை பெருமாள் தீர்த்து வைப்பார்.

நன்றி, tamil.oneindia

Related Articles

Back to top button