மருத்துவம்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சு இரவில் தூங்கும் போது தடவினால் போதும் பாத வெடிப்பை நிரந்தரமாக சரி செய்யலாம்

நாம் கை கால் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் கால் பாதங்களுக்கு வருவதில்லை. கால்களையும் முறையாக பராமரித்தால் கால் வெடிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.அதற்கான முக்கிய குறிப்பு கீழே கொடுத்துள்ளோம் பார்த்து பயனடையுங்கள்.

ஒரு பெரிய பக்கெட்டில் உங்கள் இரு கால் பாதங்களையும் ஊறவைக்கும் அளவுக்கு கொஞ்சம் வெது,வெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரோடு பாதி எழுமிச்சை பழத்தை பிளிந்து சாறை ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு முழு எழுமிச்சையைக் கூட பயன்படுத்தலாம்.

இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒன்று முதல் ஒன்றரை ஸ்பூன் வரை ரோஸ் வாட்டர், அதனோடு அரை ஸ்பூன் கடல் உப்பு போட்டு நன்றாகக் கலக்கணும். இப்போது இந்த தண்ணீரில் நம் பாதத்தை வைக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் இந்த நீருக்குள் பாதத்தை வைக்க வேண்டும். அந்த நேரத்தில் பாதத்தை ஸ்கிரப் செய்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் விலகிப் போய்விடுகிறது. இதை வாரத்துக்கு இருமுறை முயற்சித்தால் உங்கள் பாத வெடிப்புகள் பறந்துவிடும். முயற்சிக்கலாமே நட்பூஸ்…

Related Articles

Back to top button