ஆன்மிகம்

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் காவி பிடித்த பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே பற்பசை தயாரிப்பது எப்படி..?

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் காவி பிடித்த பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே பற்பசை தயாரிப்பது எப்படி..?

முகத்திற்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் பற்களும்.

கண்கள் அழகாயிருந்தாலே முகத்தின் அழகு கூடும் என்பது நாம் அறிந்ததே. எனினும் பற்களும் அழகாகவும் வெண்மையாகவும் இருக்க வேண்டும்.

அப்போது தான் முழுமையான அழகைப் பெற முடியும்.

சிலர் சிரிக்கும் போது அவர்களது பற்கள் வெண்மையாகவிருக்காது. முகம் எவ்வளவு தான் அழகாக தென்பட்டாலும் பற்கள் வெண்மையாக இருக்காதவிடத்து அந்த அழகு எடுபடாது.

பற்களை வெண்மையாக்கவென கடைகளில் விற்கப்படும் பற்பசைகளில் இரசாயனம் கலந்துள்ளமையால் அது எமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது.

எனவே பக்கவிளைவுகள் அற்ற விதத்தில் நாம் வீட்டிலேயே பற்பசை தயாரிக்கலாம். அது எப்படி எனக் கேட்கின்றீர்களா?

தேவையான பொருட்கள்
01. அரைக் கோப்பை தேங்காய் எண்ணெய்
02. 2 – 3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடா
03. 15 – 20 துளிகள் எசென்ஷpயல் எண்ணெய்
04. ஸ்டேவியா 2 பக்கெற்றுகள்

செய்முறை
பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் மற்றும் ஏனைய பொருட்களை இட்டு முள்ளுக் கரண்டி ஒன்றின் உதவியுடன் அதனை நன்கு கலக்கவும். பின்னர் அதில் பற்தூரிகையை இட்டு வழமை போல் பல்துலக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்களை வெண்மையாக்க முடியும்.

பற் சுகாதாரத்திற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள்

01. அழற்சி தடுக்கப்படும்
02. பற்கள் வெண்மையாகும்
03. தொண்டை வறட்சியடைவது தடுக்கப்படும்
04. பற்களில் அழுக்கு தங்குவது தடுக்கப்படும்
05. வெடித்த உதடுகளுக்கு சிறந்த நிவாரணி
06. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
07. பல் ஈறுகளை வலிமையாக்கும்
08. வாய் துர்நாற்றத்தை போக்கும்.

Related Articles

Back to top button