ஆன்மிகம்

‘M’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்…!

‘M’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்…!

குழந்தை பிறந்ததும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சவாலாக இருப்பது பெயர் சூட்டுவதுதான்.

வாழ்நாள் முழுவதும் சொல்லி அழைக்க வேண்டிய பெயராதலால் சிறிதளவேனும் மெனக்கிடலும் ரசனையும் இருப்பது நல்லது.

பேர் சொல்லும் பிள்ளைக்கு முதலில் தகுந்த பெயரை வைக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ நேரும் சூழ்நிலைகளில் அவர்கள் தங்கள் பெயர் பிடிக்காமல் அதனை மாற்றிக் கொள்ள முடிவெடுக்கக் கூடாது. சுருக்கமான பெயர்கள் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது.

முந்தைய தலைமுறையினருக்கு இந்தப் பிரச்னை இருந்ததில்லை. அவர்களின் பெற்றோர்களின் பெயர்களையே குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வார்கள்.

சிலர் தங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைத்துவிடுவார்கள்.

இன்னும் சிலர் குழந்தையின் அம்மா, அப்பா பெயரின் வார்த்தைகளை எடுத்து புதிய பெயரொன்றை உருவாக்கிவிடுவார்கள். இணையத்தில் தேடினால் ஆண் குழந்தை பெயர்கள் என்ற நீண்ட பட்டியலும் பெண் குழந்தைகளின் பெயர் இன்னொரு பெரிய பட்டியலாகவும் உள்ளது. பெயர், அதற்குரிய அர்த்தம் என்று விலாவரியாக விளக்கப்பட்டிருக்கும்.

ஜோதிட நம்பிக்கை இருப்பவர்களுக்கு சவால் அதிகம். இந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று ஜோதிடர் சொல்லிவிட்டால் அதற்கென தனி ஆராய்ச்சி குழுவினரையே களத்தில் இறக்கி பெயர் தேடுவோர் ஏராளம்.

சமீபத்தில் M என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைக்கு பெயர் வேண்டும் என்று உறவினர் ஃபோனில் கேட்கவே நிறைய பெயர்களைச் சொன்னேன்.

அவருக்கு எதிலும் திருப்தி ஏற்படவில்லை. அதன் பிறகு வாட்ஸ் அப்பில் சில பெயர்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன பிறகுதான் ஃபோனை வைத்தார்.

M என்ற எழுத்தில் பெயர்களைத் தேடும் போது, பேசாமல் எம் என்ற எழுத்தில் நம் பெயரையே மாற்றிக் கொள்ளலாமா என்று நினைக்கும் அளவுக்கு அப்பெயரின் மகத்துவம் குறித்து பல குறிப்புகள் கிடைத்தது.

இந்த எழுத்து மட்டுமல்ல, ஜெ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களுக்கும் சில மகத்துவங்கள் உள்ளன என்கிறது இந்த ஆருடம். M பற்றிய இந்தப் பதிவு எம்மில் சிலருக்குப் பயன்படலாம்.

M என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் கலாச்சாரம், பாரம்பரியம், ஒழுக்க விதிகள், நேர்மை, நாணயம், போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தன்னம்பிக்கை மிகுந்த இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். தன்னுடன் பழகுபவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருபவர்கள்.

விசுவாச உணர்வும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

தங்களுடைய உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்ளும் இயல்புடையவர்கள் இல்லை.

புதிய மனிதர்களிடம் அத்தனை எளிதில் பழகிவிட மாட்டார்கள். மேலும் காதல் போன்ற விஷயங்களில் ஓரடி தள்ளியே இருப்பார்கள்.

ஆனால் அதையும் மீறி காதலிக்கத் தொடங்கிவிட்டால் அவர்களது துணைக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

தங்களுடைய நண்பர்களுக்கும் மனத்துக்கு நெருக்கமானவர்களுக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதிலிருந்து அவர்களை மீட்கும் வரை ஓய மாட்டார்கள்.

தங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பற்றிய கவனமான திட்டமிடல் எப்போதும் இவர்களிடம் இருக்கும். புதிய முயற்சிகள், பயணங்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும் ப்ராக்டிகலாக யோசித்து நடைமுறை சாத்தியங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருக்கும் இவர்கள் எளிதில் மற்றவர்களை நம்ப மாட்டார்கள்.

முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும். இவர்களிடம் தேவையில்லாமல் வம்புக்கு போனவர்களை ஒருவழி செய்யாமல் விடமாட்டார்கள்.

குறை என்று சொல்வதெனில், இவர்கள் சீக்கிரமாக ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள்.

யோசித்து அதன் சாதக பாதகங்களைப் பட்டியல் இட்டு, பின்பு ஒருவழியாக எல்லா வகையிலும் தன் மனத்துக்குச் சரி என்று பட்ட பின்புதான் ஒரு முடிவை எடுப்பார்கள்

Related Articles

Back to top button