ஆன்மிகம்

ஜூலை மாதம் உங்களுக்கு எப்படி – யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா.. உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..!

ஜூலை மாதம் உங்களுக்கு எப்படி - யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா.. உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..!

ஜூலை மாதத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது.

மேலும் புதன், சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகிறது.

செவ்வாய் சிம்மத்திற்கு மாறும் போது சனியுடன் சப்தம நிலைக்கு வருகிறார்.

இப்படிப்பட்ட கிரக நிலைக்கும் மத்தியில் 12 ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

மேஷம்
ஜூலை மாத பலன்.

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் நிதி விஷயங்களில் சமநிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

உங்களின் வரவு சிறப்பாக இருந்தாலும், செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம்.

தேவையற்ற வாக்குவாதம் காரணங்களால் துன்பங்கள் அதிகரிக்கும்.

இந்த நேரத்தில், நீங்கள் காதல் விவகாரங்களில் அனுசரித்துச் செல்லவும்.

பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்களின் செயல்பாடுகளால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.

உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய மாதம். . ஜூலை இறுதிக்குள் நிலைமை படிப்படியாக மேம்படும்.

ரிஷபம்
ஜூலை மாத பலன்.

பணியிடத்தில் நல்ல செய்தி கிடைக்கும்

ரிஷப ராசியினருக்கு ஜூலை மாதத் தொடக்கத்திலேயே நீங்கள் எந்த ஒரு துறையில் பணியாற்றினாலும் அது தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.

இது தவிர, நிதி விஷயங்களிலும் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

உங்கள் செல்வம் பெருக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பயணங்கள் இனிமையாகவும், வெற்றியைத் தரக்கூடியதாகவும் இருக்கும்.

இந்த மாதம் முழுவதும் நீங்கள் பயணத்தில் மிகவும் பிஸியாக உழைக்க வேண்டியது இருக்கும்.

ஜூலை மாத இறுதியில், நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மிதுனம்
ஜூலை மாத பலன்.

பண ஆதாயம் உண்டாகும்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சிறப்பான நாளாகும்.

இன்று உங்கள் செயல்திட்டத்தின் மூலம் வெற்றி பெறலாம். உங்களின் நிதி ஆதாயங்கள் வலுவடைவதற்கான சூழ்நிலைகள் உண்டு.

இந்த மாதம் கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மேன்மையும்.

அதில் செய்யப்படும் முதலீடுகள் உங்களுக்கு பண ஆதாயத்தை அளிக்கும்.

உங்கள் ஆரோக்கியத்தில் மேன்மை இருக்கும். உள் ஆற்றல், திறமையை உணருவீர்கள்.

குடும்பத்தில் திருமணம் முதலிய வாய்ப்புகள் உண்டு. அன்பர்களின் ஆதரவால் நிம்மதியாக இருப்பீர்கள்.

இந்த நேரத்தில் நீங்கள் செல்லக்கூடிய பயணளை ஒத்திவைப்பது நல்லது. முக்கிய பயணங்கள் மட்டும் மேற்கொள்ளவும்.

ஜூலை மாத இறுதியில், மனதில் ஏதோ ஒரு சிறிய ஏமாற்றம் இருக்கலாம்.

கடகம்
ஜூலை மாத பலன்.

வேலையில் முன்னேற்றம் ஏற்படும்
கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் வேலையில் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும்.

இந்த மாதத்தில், உங்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.

அதே சமயம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வருவாய் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த மாதம் சுற்றுலா, பொழுதுபோக்கு போன்றவற்றிற்காக பயணம் செல்ல திட்டமிடுவதைச் சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது.

ஜூலை மாத இறுதியில் பெண்களின் மனம் கவலை கொள்ளும்.

சிம்மம்
ஜூலை மாத பலன்

பெண்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் பணியிடத்தில் திட்டமிட்ட விஷயங்களை செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும்.

பெண்களுக்கு அனைத்துவிதத்திலும் ஆதரவு கிடைக்கும். நிறைய நிதி நன்மைகளையும் பெறுவீர்கள்.

இந்த மாதம் பயணம் தொடர்பான விஷயங்களில் கவனமும், மிகுந்த பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டும்.

உங்களுக்கு பல சாதகமாக பலன்களை தரலாம் என்பதால் ஜூலை மாதத்தில் முயற்சிகளை அதிகரிக்கவும்.

மாத இறுதியில், வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள்

கன்னி
ஜூலை மாத பலன்.

மாதம் மங்களகரமானதாக இருக்கும்
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயங்களில் மிகவும் சாதகமான மாதமாக இருக்கும்.

இந்த மாதம் எந்த முதலீடு செய்வதிலும் கூடுதல் கவனம் தேவை. முதலீடு தொடர்பான சந்தேகங்கள் இருக்கும்.

நீங்கள் தைரியமாக எடுக்கும் முடிவு உங்கள் நிதி முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக இருக்கும்.

உங்கள் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் சில விஷயங்கள் மன உளைச்சலை உண்டாக்கும்.

ஜூலை மாதத்தில் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்

துலாம்
ஜூலை மாத பலன்.

பொருளாதார விஷயங்கள் மேம்படும்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

முதலீடுகள் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பால் வாழ்க்கையில் உங்களுக்கான ஒரு இடத்தை பெறுவீர்கள். பெண்களின் உதவி கிடைக்கும்.

இந்த மாதம் பயண திட்டங்கள் நிறைவேறும். பயணத்தின் மூலம் சுப பலன்களைப் பெற்றிட முடியும்.

குடும்பத்தில் பரஸ்பர அன்பு பெருகும். மனதிற்குள் சில சஞ்சலங்கள் இருந்து கொண்டே இருக்கும். பணியிடத்தில் உங்களின் பிரச்னைகள் அதிகரிக்கலாம். மாத இறுதியில் உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும்

விருச்சிகம்
ஜூலை மாத பலன்.

பரபரப்பாக செயல்படுவீர்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் மிகவும் சாதகமாக இருக்கும்.

நீங்கள் பணம் சம்பாதிக்க வலுவான சூழ்நிலைகள் உருவாகும். இந்த மாதம் நீங்கள் பணம் தேடல் தொடர்பான விஷயங்களில் மிகவும் பிஸியாக இருக்கப் போகிறீர்கள்.

ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் பல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

பணியிடத்தில் சிலரால் நீங்கள் ஏமாற்றப்படலாம். எந்த விஷயங்களையும் கவனமாக மேற்கொள்ளவும்.

காதல் உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். இந்த மாதம் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும்.

இம்மாத இறுதியில் தந்தை, பெரியவர்களின் உதவியால் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

தனுசு
ஜூலை மாத பலன்.

பயணங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்

தனுசு ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் தங்கள் வேலையைப் பற்றி மிகவும் பொறுப்புடன் இருப்பார்கள்.

பொருளாதார விஷயங்களில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும்.

இருப்பினும், பணத்தைப் பற்றிய அணுகுமுறையில் கவனம் தேவை. தேவையற்ற செலவு செய்ய மனம் தூண்டும்.

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த மாதம் மேற்கொள்ளும் பயணங்கள் மிகவும் சாதகமாக இருக்கும்.

குடும்ப விஷயங்களில் சில தடைகள் உண்டாகலாம். மாதக் கடைசியில் உங்கள் கருத்தை செயல்படுத்த முடியும்.

மகரம்
ஜூலை மாத பலன்.

பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் உண்டு

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும்.

இந்த மாதம் உங்களுக்கு நிதி விஷயங்களை சிறப்பாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். காதல் உறவில் காலம் சாதகமாக இருக்கும்.

ஜூலை மாத பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. பயணங்களின் போது சில சங்கடங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

பணியிடத்தில் மோதல் சூழ்நிலைகள் அதிகரிக்கக்கூடும், மேலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்
ஜூலை மாத பலன்.

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் ஏற்ற, இறக்கமான மாதமாக இருக்கும்.

இந்த மாதம், நீங்கள் குடும்பம், வேலை என இரண்டிலும் சமநிலையைப் பேணுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் மிகவும் நிம்மதியாக இருப்பீர்கள்.

காதல் விவகாரங்களில் சில பிரச்சனைகளைக் கேட்டு மனம் சற்று வருத்தமடையலாம். உங்களுக்கு சில செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த மாதம் பயணத்தைத் தவிர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜூலை இறுதியில், ஒரு புதிய ஆரம்பம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும்.

மீனம்
ஜூலை மாத பலன்.

பயன்படுத்தவும். இந்த மாதம் நீங்கள் ஒரு பெண்ணின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அனுபவிப்பீர்கள்.

பயணம் செல்ல திட்டமிடல் சாதகமாக இருக்கும். அதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.

இந்த மாதம் நீங்கள் நினைத்ததை விட அதிகம் செலவிட வேண்டியது இருக்கும்.

உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். ஜூலை மாத இறுதியில், வீட்டு பராமரிப்புக்காகக் கொஞ்சம் பணம் செலவழிக்க நேரிடும்.

News Credit. Samayam Tamil
Image Credit. Yarldeepam

Related Articles

Back to top button