இந்திய செய்திகள்

கிராமத்து மண் வாசனையில் சுவையான வெந்தய குழம்பு இப்படி செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். எல்லாரும் விரும்பி சாபிடுவாங்க..

எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் வெந்தய குழம்பை மிக இலகுவாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம்

நாம் எமது வீட்டிலேயே அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாகவும் இலகுவாகவும் வெந்தயக் குழம்பை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

• ஒரு தேக்கரண்டி அரிசி
• ஒரு தேக்கரண்டி சீரகம்
• அரை தேக்கரண்டி மிளகு
• அரை தேக்கரண்டி வெந்தயம்
• 100 மில்லி லீற்றர் எண்ணை
• சிறிதளவு கடுகு
• சிறிதளவு வெந்தயம்
• சிறிதளவு வெங்காயம்
• தேவையான அளவில் கருவேப்பிலை
• மூன்று தக்காளிப்பழம்
• உப்பு
• பெருங்காயத்தூள்
• அரை தேக்கரண்டி மஞ்சல் தூள்
• ஒரு தேக்கரண்டி மிளாகய்த் தூள்
• ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள்

செய்யும் முறை பின்வருமாறு

ஒரு சட்டியினை முதலில் மிதமாக சூடு பண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பாவனையிலுள்ள ஏதாவது தேக்கரண்டியை உபயோகித்து அதன் மூலம் ஒரு தேக்கரண்டி அரிசி, ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம் இவை அனைத்தையும் மிதமாக சூடு பண்ணி வைத்துள்ள சட்டியில் போட்டு நல்லா வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்து எடுத்த பின்னர் நல்லா பசைபோல நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து நன்றாக சூடாக்கிக்கொள்ளுங்கள் பின்னர் அதில் 100 மில்லி லீற்றர் எண்ணை சேர்த்துக்கொள்ளுங்கள். நல்லெண்ணை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எண்ணை சூடாகியதும் சிறிதளவு கடுகு சேர்த்துக்கொள்ளுங்கள். கடுகு நல்லா வெடிக்க ஆரம்பித்ததும் அதனுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கூடுதலாக வெந்தயம் சேர்த்துவிடாதீர்கள். அவ்வாறு சேர்த்தால் கொஞ்சம் கசப்புத்தன்மையை உண்டுபண்ணிவிடும். கடுகு, வெந்தயம் பொரிந்த பின்னர் சின்ன வெங்காயம் 30 தை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிதமான சூட்டில் வைத்து நல்லா வறுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 5, 6 பூண்டை நல்லா நசுக்கி இதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சேர்த்துக்கொள்ளப்பட்ட அனைத்தினதும் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவில் கருவேப்பிலை இதனுடன் சேர்த்துக் வதக்கிக்கொள்ளுங்கள்.

ஏல்லாம் நன்றாக வதங்கிய பின்னர் மூன்று தக்காளிப்பழத்தை சிறிய சிறய துண்டுகளாக்கி இதனுடன் சோர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். தக்காளி சீக்கிரம் வதங்குவதற்காக சிறிதளவு இதனுடன் உப்பு சோர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து வதக்குவதனால் தக்காளி சீக்கரமாக வெந்து மசிஞ்சு வந்திடும். துக்காளி நன்றாக மசிஞ்சு வந்ததும் இதனுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சோர்த்துக்கொள்ளுங்கள்.

இதோட அரை தேக்கரண்டி மஞ்சல் தூள், ஒரு தேக்கரண்டி மிளாகய்த் தூள், ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக சோர்த்துக்கொள்ளுங்கள்.

காரம் அதிகமாக உங்களுக்குத் தேவைப்படின் தேவையான அளவில் மிளகாய்த் தூளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தையும் குறைவான அதாவது மிதமான சூட்டில் வைத்து செய்துகொள்ளுங்கள். அதிகமான சூட்டில் செய்தால் மசாலா கருகிவிடும். நன்றாக எல்லாம் சோர்ந்து வதங்கியதும் தேவையான அளவில் புளிக்கரைசல் சோர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வெந்தய பொடியை ஒன்றரைத் தேக்கரண்டி அளவில் எடுத்து இத்துடன் சோர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பின்னர் இத்துடன் கொஞ்ச தண்ணீர் சோர்த்து மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சிறிது நேரம் கழிந்த பின்னர் குழம்பு நன்றாக வத்தியிருப்பதுடன் எண்ணையும் தனியாக பிரிந்து வந்திருக்கும். மீண்டும் இவை அனைத்தையும் நன்றாக கலந்து சிறிது நேரம் சூட்டில் வைத்துவிடுங்கள் குழம்பு கொஞ்சம் வைத்தி வந்ததும் சிறிதளவில் வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தைச் சேர்ப்பது வெந்தையக் குழம்பு மட்டுமல்ல காரமான குழம்பின்; சுவையையும் மேலும் அதிகமாக்கிவிடும். இறுதியாக அடுப்பிலிருந்து இவற்றி இறக்கி சுடச்சுடப்பரிமாற்றிக்கொள்ளுங்கள்.

மேலும் சமையல் குறிப்புக்களை அறிந்துகொள்ள எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்.

Related Articles

Back to top button