திருமண தடை நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெற வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றினால் திருமணம் நடைபெறும்.
திருமண தடை நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெற வியாழக்கிழமையில் நெய் தீபம்
ஏற்றினால் திருமணம் நடைபெறும்.
புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல்,துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.
ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபடுவதோடு நவகிரகங்களை 9 முறை சுற்ற வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.
திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் கன்னிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் பற்றி பார்க்கலாம்.
திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் கன்னிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் பற்றி பார்க்கலாம்.
காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.
திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.
திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்
Source : tamil.samayam