ஆன்மிகம்

மணி பிளாண்ட் செடியை விட மிக வேகமாக பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த செடிக்கு உள்ளது – இந்த செடிகளை இந்த திசையில் வைத்து இப்படி செய்தால் போதும் நீங்கள் வேண்டாம் என சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம். நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கு சில பரிகாரங்களை செய்யலாம்.

பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது.

பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.

வளம் தரும் வடக்கு வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும்.

பணம் வைக்க கூடாத இடம் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து சிலர் பூஜை அறையில் வைப்பார்கள். பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

செலவு செய்தால் தப்பில்லை பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.

ஈயா பண்டம் தீயாய்க் கெடும் என்பார்கள். சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுடைய மகன்,மகள்,பேரன்மார்கள் தான் அந்தப் பணத்தைச் செலவு செய்து வாழ்வார்கள்.

2000 ரூபாய் நோட்டு உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும். பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். 2000 ரூபாய் நோட்டாகவோ அல்லது 500 ரூபாய் நோட்டாகவோ வைக்கலாம்.

பணப்பெட்டியில் நறுமணம் பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்.

பணத்தை ஈர்க்கும் சக்தி பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமே உங்களிடம் தேடி வரும்.

பணம் வரும் வழி ஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் அந்த செடியானது, செழிப்பாக வளர வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு

பணம் சேர வழி குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்.

பணத்தை ஈர்க்கும் சிவப்பு பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகை நேரத்திர் ஒரு கண்ணாடி பௌலில் சிகப்பு பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கை அறையில் அல்லது யாரும் அடிக்கடி வராத இடங்களில் இதை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம். உங்கள் வீட்டில் யாராக இருந்தாலும் சரி அந்த சிகப்பு பட்டு துணியின் மீது குளிகை நேரத்தில் தினமும் ரூபாய் நோட்டுகளை சேமித்து வருவதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற முடியும். குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது.

Source . tamil.oneindia

Related Articles

Back to top button