கல்வி

கிரிஸ்பியான பிரட் கட்லட் பத்தே நிமிடத்தில்…! செஞ்சி பாருங்க உடனே காலியாகிடும்.

கிரிஸ்பியான பிரட் கட்லட் பத்தே நிமிடத்தில்…! செஞ்சி பாருங்க உடனே காலியாகிடும்.

தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் பாண்- 5 ஸ்லைஸ்
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு- 2
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
மல்லி இலை- சிறிதளவு
இஞ்சி,பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
சீரக தூள்- ½ தேக்கரண்டி
மிளகு தூள்- ½ தேக்கரண்டி
சாட் மசாலா- ½ தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
சோளமா- 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் பாணின் ஓரங்களை வெட்டி விட வேண்டும் ஏனெனில் பொறிக்கும் போது நிறம் மாறுவதுடன் உள்ளே உள்ள கட்லெட் சரியாக வேகாமல் போய்விடும்.

பின்னர் ஒரு மிக்சிங் பவுலில் பாணை சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு இதனுடன் மீடியம் சைஸில் உருளைக்கிழங்கு-2, இதனை (குக்கரில் நான்கு விசிலுக்கு வேக வைத்து தோல் உரித்து மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்)

அதன்பின்னர் பொடியாக வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தில் ஒன்று, பொடியாக வெட்டி வைத்த இரண்டு பச்சை மிளகாய், அதன் கூடவே பொடியாக வெட்டி வைத்த மல்லி இலை கொஞ்சம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மேலும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், காரத்திற்காக ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,

அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள், அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், காட் மசாலா அரை டேபிள்ஸ்பூன்,( இது இருந்தால் மட்டுமே )பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். (மைதா மாவும் சேர்த்துக் கொள்ளலாம்)

பின்னர் கையில் சிறிது எண்ணையை தடவி விட்டு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு மாவை எடுத்து வெடிப்பில்லாமல் மாவை நன்றாக உருட்டி எடுத்த பின் உள்ளங்கையில் வைத்து கட்லெட் ஷேப்பிக்கு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா மாவையும் அவ்வாறு செய்து வேறொரு தட்டில் வைத்துவிட்டு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி ஸ்டவ்வை மீடியம் ஹீட்டில் வைத்துவிட்டு கட்லெட்டை உள்ளேயிட்டு பொறிக்க முடியும்.

ஒரு பக்கம் மீடியமான தீயில் லைட்டாக பொரிந்ததும் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடல் வேண்டும்.இரண்டு பக்கமும் நன்றாக பொரிந்து எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் எண்ணெயை வடித்து வெளியே எடுத்த பின் மீதமுள்ள எண்ணையை உறிஞ்சும் வகையில் ஒரு தட்டில் டிசு பேபர் இட்டு அதில் கட்லட்டை வைத்தால் நன்றாக இருக்கும்.

இதை (பொரிக்காமல் தோசை தவ்வாவில் சிறிது எண்ணையிட்டு வேக வைத்தும் எடுக்கலாம்).

அவ்வளவே தான் மொறு மொறு பிரட் கட்லட் ரெடி…

Related Articles

Back to top button