ஆன்மிகம்

கட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இந்த 2 பொருட்களை வைத்தால் போதும். குபேரரின் மனம் குளிரும். வீட்டில் எப்போதும் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

கட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில்
இந்த 2 பொருட்களை வைத்தால் போதும். குபேரரின் மனம் குளிரும்.
வீட்டில் எப்போதும் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும்.

சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது.

அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.

பணம் எப்போதும் ஒருவரின் கையில் சரளமாக புழங்க வேண்டும் என்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். ஈசான்ய மூலையில் உள்ள ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.

வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம்.

தெற்கு திசையில் உள்ள பீரோவில் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

ஒரு சிலர் பணத்தை பூஜை அறையில் வைத்து பயன்படுத்துவார்கள். பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள்.

பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது.

அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும். உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.

பணப்பெட்டியில் எப்போதும் ஒருவித வாசனை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பச்சைக்கற்பூர வாசனை வீசும். நெய் வாசனை நிறைந்திருக்கும். பணம் வைக்கும் நம்முடைய வீட்டு பீரோவில் சிறிதளவு பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம். சில ஏலக்காய்கள், சோம்பு போட்டு வைக்கலாம்.

வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமே உங்களிடம் தேடி வரும்.

ஒரு சிலர் பணத்தை தேடி தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது.

நிம்மதியை தேடும் போது வாழ்க்கை தொலைந்து விடும். பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும். சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். ஈயா பண்டம் தீயாய்க் கெடும் என்பார்கள்.

சிலருக்கு வாஸ்து தோஷத்தினால் பணம் சேராமல் இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவே தங்காது.

அப்படி இருப்பவர்கள் வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் செல்வம் பெருகும். பணம், நகை வைக்கும் பீரோவில் ஒரு மயிலிறகை வையுங்கள். செல்வம் அதிகரிக்கும் தங்கம் நம்முடைய வீட்டில் தங்கவும் செய்யும்.

அதே போல மகாலட்சுமியின் அருள் நிறைந்த வலம்புரி சங்கினை நம்முடைய வீட்டில் வைத்தால் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது. அள்ள அள்ள குறையாத செல்வ வளத்தோடு நிரந்தர கோடீஸ்வரர் ஆக வாழலாம்.

நன்றி. https://tamil.oneindia.com/

Related Articles

Back to top button