சமையல் குறிப்புகள்

பணியாரம் இப்படி செய்து பாருங்கள் பஞ்சு போல இருக்கும்!! இதன் ருசியே தனி தான்!!

தேவையான பொருட்கள் 

பச்சை அரிசி – ஒரு கோப்பை

முழு உழுந்து – ஒரு கோப்பை

உப்பு –  ஒருதேக்கரண்டி

தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய் – 1

ஏலக்காய்த் தூள் – ஒரு தேக்கரண்டி

சக்கரை – ½ கோப்பை

செய்முறை 

ஒரு மிக்ஸிங் பவுலில் ஒரு கப் அளவு பச்சரிசி சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது புழுங்கரிசியும் சேர்த்துக்கொள்ளலாம். இது கூடவே ஒரு கப் அளவுக்கு முழு உளுந்து சேர்த்தல் வேண்டும்.பின்னர் தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று தடவை நன்றாக கழுவி தண்ணியை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்த பின் தண்ணீரை வடித்து பின்னர் மிக்ஸி ஜாருக்கு மாற்றி இது கூட ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்த பின் தேங்காய் பாலை தயார் பண்ணுவதற்காக முழு தேங்காயை சிறுசிறு சில்லுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.பின்னர் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துவிட்டு இது கூடவே ஏலக்காய் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இரண்டு மூன்று ஏலக்காயை நசுக்கி விட்டு சேர்த்துக் கொள்ள முடியும். அதன் பின்னர் பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளல் வேண்டும்.

பின்னர் நன்றாக பிழிந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். பிறகு பிழிந்த சக்கையை மறுபடியும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து மறுபடியும் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தேங்காய் பால் நிறையவே எடுத்தால் தான் பணியாரம் டேஸ்டாக இருக்கும். அதன்பின் இந்த பாலில் தேவையான அளவுக்கு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை அரைக்கப் அளவுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக தேவைக்கேற்றாற்போல் டேஸ்ட் பார்த்து சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் சர்க்கரை கரையும் வரை நன்றாக மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். இனி ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி  மீடியம் ப்ளேமில் வைத்து விட்டு   கையில் மாவை கொஞ்சமாக எடுத்து எண்ணெயிலிட்டு டீப் ப்ரை செய்ய வேண்டும்.ஆனால் பணியாரத்தின் நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெள்ளையாக இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும்.

இனி ரெடி பண்ணிய பால் பணியாரங்களை செய்து வைத்த தேங்காய் பாலில் சேர்த்து பத்து நிமிடம் ஊறவிட்டால் பால் பணியாரம் ரெடி கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

Related Articles

Back to top button