ஆன்மிகம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள்களா நீங்க? அப்ப முதல்ல இத பாருங்க. உங்க வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருக்குமாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள்களா நீங்க? அப்ப முதல்ல இத பாருங்க. உங்க வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருக்குமாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள்களா நீங்க? அப்ப முதல்ல இத பாருங்க.
உங்க வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருக்குமாம்.

வீரம், விவேகம், வசீகரம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டு அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி நேயர்களுக்கு வணக்கம்.

உங்கள் ராசியில், கார்த்திகை நட்சத்திரத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதங்களும், ரோகினி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கி உள்ளன.

உங்கள் ராசியின் அதிபதி சிவனின் அடையாளமான காளை என்பதால், மாடு அசைபோடுவது போல, எதையும் ஆற அமர யோசித்து நிதானமாக முடிவெடுப்பீர்கள். எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள்.

உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், கலை, காவியம், ஓவியம் என ஏதாவது ஒரு தனித்திறமை உங்களிடம் குடிகொண்டிருக்கும்.

எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், அவரோடு மோதிப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் எப்போதும் இருக்கும்.

உலகை வழி நடத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், படைப்புக் கடவுள் பிரம்மன், தர்மவான் எமதர்மன், நீதிமான் சனி பகவான் ஆகியோர் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் என்பதால், இந்த நான்கு விதமான குணாதிசயங்களும் உங்களிடம் ஏதாவது ஒரு வகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ரிஷபம், ஸ்திர ராசியாக இருப்பதால், பெரிய அளவில் அலைந்து திரியாமல், உட்கார்ந்த இடத்திலேயே அனைத்துக்கும் தீர்வு காணும் ஆற்றல் உங்களிடம் நிரம்பி இருக்கும்.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி கொண்ட சுக்கிரனே ரிஷப ராசியின் அதிபதி என்பதால், அடுத்தவர்களை கவர்ந்து இழுக்கும், சில அபார சக்திகள் உங்களிடம் குடிகொண்டிருக்கும்.

மிகப்பெரிய மேதைகளை மடக்கும் சாதுரியமும் நிறைந்திருக்கும்.

உங்கள் ராசியின் அடையாளம் காளை என்பதால், ஒரு போதும், ஓய்வெடுக்க விரும்பாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓய்வெடுக்க நினைத்தால் உடலும், மனதும் பாதிக்கும்.

குளிர்ச்சிக்கும், சிந்தனா சக்திக்கும் உரிய கிரகமான சந்திரன், ரிஷப ராசியில் உச்சம் பெறுவதால், உங்களிடம் அழகுக்கும், கற்பனை சக்திக்கும் பஞ்சம் இருக்காது. அதே சமயம், மன சஞ்சலமும் அதிகமாக இருக்கும்.

விதவிதமான ஆடை அணிகலன்களை அணிவதிலும், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதுவே உங்களுக்கு புத்துணர்ச்சியையும் தரும்

News Credit. virgonews

Related Articles

Back to top button