கன்னி ராசியில் பிறந்தவர்கள்களா நீங்க? அப்ப முதல்ல இத பாருங்க. உங்க வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருக்குமாம்.
இந்த பதிவினை பாடிக்க முடியாதவர்கள் கிழே வீடியோ வடிவிலும் தரப்பட்டுள்ளது. அந்த வீடியோவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவினை பாடிக்க முடியாதவர்கள் கிழே வீடியோ வடிவிலும் தரப்பட்டுள்ளது. அந்த வீடியோவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி ராசியில் பிறந்தவர்கள்களா நீங்க? அப்ப முதல்ல இத பாருங்க.
உங்க வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருக்குமாம்.
கன்னி ராசி குணங்கள்
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார்.
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2 ஆம் பாதங்களும் இதில் அடங்கியுள்ளன.
புதன் பகவான் உச்சம் பெறும் ராசி கன்னி ராசி ஆகும். புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார்.
கன்னி ராசிக்காரகள் மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். இவர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
இவர்களுடைய திறமை, மற்றும் தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், இவர்களுக்கு இவர்களே மகுடம் சூட்டிக் கொள்வார்கள்.
இவர்களை சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பார்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவார்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவார்கள். நீண்ட நாட்களுக்கு இவர்களால் ஒரு தொழிலாளியாக இருக்க பிடிக்காது.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களிடம் காணப்படும் அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும்.
இவர்களின் தோற்றத்தை வைத்து இவர்களின் வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி இவர்களிடம் இருக்கும். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள்.
அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கு உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடம் நிதானமும் இருக்கும்.
இவர்களுக்குப் பொதுவாகவே நீண்ட ஆயுள் உண்டு. இவர்கள் மற்றவர்களை பேச வைத்து ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள். உலக விஷயங்களை தெரிந்து கொள்வதில் இவர்களிடம் அதிக ஆர்வம் இருக்கும்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தார் போல தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சுக, சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள்.
இவர்களிடம் நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் இருக்கும். எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும் அகங்காரம் இல்லாமல் தாம் கற்றதை பிறருக்கும் சொல்லி கொடுப்பார்கள்.
பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுப்பார்கள். பிரசங்கம் செய்வது, உபனியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
சாந்தமான வார்த்தைகளால் நயமாகப் பேசி பிறரை தன் வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள்.
தவறு செய்பவர்களைக் கூட தன் அன்பான பேச்சால் திருத்தி விடும் இயல்பு கொண்டவர்கள்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்குப் தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணம் சம்பாதிப்பர்கள்.
இவர்களுக்குத் தங்களது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்துக்கு தகுந்த செலவுகள் செய்து கடன்கள் இல்லாமல் வாழ்வார்கள்.
கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள்.
பொதுநல பணிகளுக்கு ஓரளவு செலவு செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள்.
பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள்.
மற்றபடி, கொடுக்கல் – வாங்கல் போன்ற சமயங்களில் பெருந்தொகையை ஈடுபடுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இவர்கள் செயல்படுவது நல்லது. இல்லையேல், தேவை இல்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
கன்னி ராசிக்காரர்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவார்கள். இவர்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், இவர்களின் அறிவுத் திறமையைப் பயன்படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.
உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார்கள். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். இவர்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், இவர்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும்.
ஏனெனில், இவர்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள்.
புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள்.
அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் மனதில் நிலை நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.