மருத்துவம்

உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா? மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க. செய்தால் வீட்டில் பண கஷ்டம் பண விரயம் ஏற்படும் வறுமை மேல் வறுமை ஏற்படும்.

உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா?
மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க. செய்தால் வீட்டில் பண கஷ்டம் பண விரயம் ஏற்படும் வறுமை மேல் வறுமை ஏற்படும்.

இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்காக வீட்டில் பல பொருட்களை வாங்கி வைக்கிறார்கள்.

அதில் ஒன்று தான் மணி பிளான்ட். இந்த செடி வீட்டிற்கு ஒருவித அழகைக் கொடுப்பதோடு, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

ஒருவர் வீட்டில் மணி பிளான்ட்டை வைத்தால், சில விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், வீட்டில் பணம் சேர்வதற்கு பதிலாக, அதிகம் செலவை ஏற்படுத்தும்.

குறிப்பாக வீட்டில் மணி பிளான்ட்டை தவறான இடத்தில் வைத்தால், அது ஒருவரை ஏழ்மையில் தள்ளிவிடுவதோடு,

வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளோர் பண பிரச்சனை, கடன் சுமையால் கஷ்டப்பட நேரிடும். இப்போது வீட்டில் மணி பிளான்ட் வைத்திருப்பவர்கள் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

தவறு #1

வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது.

நற்பலன்கள் கிடைக்க வேண்டுமானால், மணி பிளான்ட் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் பணம் பெருகும்.

தவறு #2

வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடியை காய்ந்த இலையுடன் வைக்கக்கூடாது. காய்ந்த இலையுடன் மணி பிளான்ட் செடியை வைப்பது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

எனவே வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடியில் காய்ந்த இலை இருந்தால் அந்த இலையை உடனே அப்புறப்படுத்துங்கள் அல்லது செடியை மாற்றுங்கள்.

தவறு #3

மணி பிளான்ட் செடியை வீட்டினுள் மேலிருந்து கீழாக தொங்கவிடக்கூடாது. மாறாக அந்த கொடியை ஒரு குச்சி அல்லது நூலின் உதவியால் மேல் நோக்கி செல்லுமாறு உயர்த்த வேண்டும்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் வாழ்வில் வேகமாக முன்னேறுவார்கள். இல்லாவிட்டால், வாழ்வில் தடைகளை சந்திக்கக்கூடும்

தவறு #4

மணி பிளான்ட் செடியை வீட்டிற்கு வெளியே எப்போதும் வைத்து வளர்க்கக்கூடாது.

அலங்காரத்திற்காக கூட வீட்டிற்கு வெளியே மணி பிளான்ட் செடியை வைக்காதீர்கள். வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டினுள் தான் வைத்து வளர்க்க வேண்டும். அப்படியென்றால் தான் அதன் பலனைப் பெற முடியும்.

தவறு #5

எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட் செடியை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து வளர்க்கக்கூடாது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மணி பிளான்ட் செடியை கண்ணாடி பாட்டில் அல்லது மண் பாத்திரத்தில் தான் வைத்து வளர்க்க வேண்டும்.

Related Articles

Back to top button