ஆன்மிகம்

இந்த பொருட்கள் உங்க வீட்டுல இருந்தா உடனே தூக்கி போடுங்க.. இல்ல என்றால் வீட்டுல கஷ்டம் பலமடங்கு அதிகரிக்கும்.. தீராத கஷ்டம் ஏற்படும்.

இந்த பொருட்கள் உங்க வீட்டுல இருந்தா உடனே தூக்கி போடுங்க.. இல்ல என்றால் வீட்டுல கஷ்டம் பலமடங்கு அதிகரிக்கும்.. தீராத கஷ்டம் ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன.

ஆகவே தான் நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதுவும் ஒவ்வொரு பொருட்களையும் சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, வாழ்க்கையில்

பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாஸ்துப்படி வீட்டில் ஒருசில பொருட்களை வைத்திருக்கக்கூடாது மற்றும் ஒருசில பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைக்கக்கூடாது.

அப்படி வைக்கும் போது, அதன் விளைவாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருமடங்கு அதிகரித்து, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம், நிதி நிலை போன்றவற்றில் பல எதிர்பாராத பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்கள் பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் பயன்படுத்தப்படாத அல்லது உடைந்த பொருட்களை அழகாக உள்ளது என்ற காரணத்திற்காக சேகரித்து வைத்திருப்பார்கள்.

ஆனால் இப்படி வீட்டில் பயன்படுத்தாத பயனற்ற பொருட்களை சேகரித்து வைப்பதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, ஆரோக்கியம், நிதி நிலை, மன நிலை, உணர்ச்சி ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எனவே உபயோகப்படுத்தாத பொருட்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனே வீட்டில் இருந்து அகற்றுங்கள்.

கட்டிலுக்கு அடியில் எதையும் வைக்காதீர்கள்

நிறைய பேர் தாங்கள் படுக்கும் கட்டிலுக்கு அடியில் காலணிகளை விடுவார்கள்.

ஆனால் இப்படி கட்டிலுக்கு அடியில் செருப்புக்களை வைத்தால், அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைத் தடுத்து, எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

இதன் விளைவாக நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்காமல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே உங்கள் கட்டிலுக்கு அடியில் செருப்புக்களை விடுவீர்களானால், அதை உடனே அகற்றுங்கள்

முட்செடிகள்

வாஸ்துப்படி, கற்றாழை செடியை மற்றும் ரோஜா செடிகளைத் தவிர, பிற முட்களைக் கொண்ட செடிகளை அழகாக உள்ளது என்பதற்காக வீட்டில் வைத்திருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள்.

ஏனெனில் இப்படிப்பட்ட செடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகம் ஈர்க்கும். இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போதும் பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.

எனவே இந்த செடிகளுக்கு பதிலாக மணி பிளாண்ட், மூங்கில் செடி, ரப்பர் செடி போன்றவற்றை வளர்த்து வாருங்கள்

Related Articles

Back to top button