ஆன்மிகம்

நினைத்தது நிறைவேற, வீட்டு பிரச்சனைகள் தீர இந்த பொருளை பூஜை அறையில் வைத்து பாருங்கள். பணம் வந்து கொண்டே இருக்கும்.

நினைத்தது நிறைவேற, வீட்டு பிரச்சனைகள் தீர இந்த பொருளை பூஜை அறையில் வைத்து பாருங்கள். பணம் வந்து கொண்டே இருக்கும்.

நினைத்தது நிறைவேற, வீட்டு பிரச்சனைகள் தீர இந்த பொருளை பூஜை அறையில் வைத்து பாருங்கள்.
பணம் வந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் பணம் தங்கவே மாட்டேன் என்கிறது என வருந்துபவர்கள் வீட்டில் சில எளிய பரிகார முறைகளை கடைபிடித்தாலே, நாம் செலவு செய்த பணம், போன வேகத்திலேயே ஏதோ ஒரு வழியில் நம்முடைய வீடு தேடி வந்து விடும்.

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால், மகாலட்சுமியின் அருட்கடாட்சம் நம்முடைய வீட்டில் எப்போதும் நிறைந்து இருக்கும்.

வீட்டில் பணம் சேர :

வீட்டில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதற்கு, பணக் கஷ்டம், கடன் குறையாமல் இருந்து கொண்டே இருப்பதற்கு, நோய் பாதிப்பு இருப்பதற்கு ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள் மட்டும் காரணம் கிடையாது.

வாஸ்து சரியில்லாமல் இருப்பதும் சில சமயங்களில் காரணமாக இருக்கலாம். நாம் எத்தனையோ கோவிலுக்கு சென்று, எத்தனையோ தெய்வங்களை வணங்கி, பூஜைகள், மந்திரங்கள் சொன்னால் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

பணப்பிரச்சனை தீர பரிகாரம் :

அப்படி பிரச்சனைகள் தீர வேண்டும், பணம் வந்து கொண்டே இருக்க வேண்டுமானால் முதலில் குல தெய்வத்தின் அருள் தேவை.

குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நமது இஷ்ட தெய்வம் உள்ளிட்ட பிற தெய்வங்களின் அருள் கிடைக்கும்.

ஆனால் நாம் வாழும் வீட்டின் அமைப்போ ஏதோ ஒன்று சரியில்லாமல் இருந்தால் குல தெய்வத்தின் அருள் கிடைப்பதில் கூட தடை ஏற்படும்.

பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள் :

ஆனால் வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில், குறிப்பாக வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடம் ஆகியவற்றில் மங்கலங்களை, நேர்மறை மற்றும் தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வைத்தாலே, வீட்டில் அள்ள அள்ள குறையாக செல்வம் வந்து கொண்டே இருக்கும்.

கஷ்டம் என்பது இருக்கவே இருக்காது. இருந்த கஷ்டமும் இடம் தெரியாமல் சென்று விடும். அப்படி வீட்டின் பூஜை அறையில் எந்த பொருளை, எப்படி வைத்தால் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதே இங்கே பார்க்கலாம்.

ஒரு சிறிய மண் கலசம் அல்லது மண் குவளையை வாங்கி, அதில் கல் உப்பை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அந்த உப்பிற்கு நடுவே சிறிய அளவு வசம்பு துண்டினை வைத்து, அதன் மேல் உப்பை வைத்து மூடி விட வேண்டும். வசம்பு அல்லது பெயர் சொல்லாதது என சொல்வார்கள்.

இது நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும். வசம்பு வெளியில் தெரியாத படி முழுவதும் மூழ்கும் படி உப்பை வைத்து நிரம்பி விட வேண்டும்

​எண்களின் ரகசியம் :

பிறகு அந்த குவளையின் மீது வெள்ளை நிற மார்க்கரால் 520 என்ற எண்ணை மேலாகவும், அதற்கு கீழ் 741 என்று எண்ணையும் எழுத வேண்டும்.

இந்த குவளையை யார் கண்ணிலும் படாதவாறு, சுவாமி படங்களுக்கு பின்னால் மறைத்து வைத்து விட வேண்டும்.

எண்கள், மந்திரங்களுக்கு ஒப்பானதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ இந்த குவளையை எடுத்து, அதிலுள்ள உப்பு மற்றும் வசம்பை மாற்றி விட்டு, வேறு உப்பு, வசம்பு ஆகியவற்றை வைத்து, யார் கண்ணிலும் படாமல் வைத்து விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்வதால் வீட்டில் பணம் வந்து கொண்டே இருக்கும். நாம் செலவு செய்த பணம் கூட பல மடங்காக நம்மிடம் திரும்பி வந்து விடும். வீண் விரயங்கள் ஏற்பட்டு சேமிப்பு கரைவதும் இருக்காது.

நன்றி. தமிழ் சமயம்.

குறிப்பு. இந்த தகவல் தமிழ் சமயம் எனும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.

இந்த பதிவில் ஏதேனும் குறை மற்றும் பதிவினை நீக்குவது தொடர்பில் fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரியபடுத்தவும்

Related Articles

Back to top button