Uncategorized

நம்ப முடியலையே…”K” என்ற எழுத்தை முதலெழுத்தாக கொண்டவர்களின் தலையெழுத்து இப்படித் தான் இருக்குமாம்..!

நம்ப முடியலையே…”K” என்ற எழுத்தை முதலெழுத்தாக கொண்டவர்களின் தலையெழுத்து இப்படித் தான் இருக்குமாம்..!

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன.

அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று.

அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.

K என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

K என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசயங்கள் மற்றும் பலம்.

இவர்களுக்கு கற்பனா சக்தி அதிகம். இது தான் இவர்களது பலம் என்று சொல்லலாம்.

இவர்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் சில வாய்ப்புகள் கிடைத்தால் இவர்கள் அதை பயன்படுத்தி கற்றுக்கொண்டு மேலே உயர்ந்துக்கொண்டே வருவார்கள்.

அந்த நுணுக்கங்களை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று இவர்களுக்கு தெரியும். K என்ற எழுத்து எந்த கிரகத்திற்கு ஒப்பாகும் என்றால் அது சந்திரன்.

இந்த K எழுத்துக்கு என்ன சிறப்பு என்றால் திடமான மனதிடம். சிந்தனை அதிகம். கற்பனை அதிகமாக இருப்பதால் திடமான மனது இவர்களுக்கு இருக்கும். தெளிவான சிந்தனை இவர்களிடம் உண்டு.

* கற்பனை சக்தி அதிகம்
* நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
* திடமான மனதிடம்
* சிந்தனை சக்தி, கற்பனா சக்தி அதிகம்.
* தெளிவான சிந்தனை.

இவர்களது தொழிலில் சாந்தமாக, அமைதியான சூழலில் தங்களது அறிவை எப்படி வளர்த்துக்கொள்வது, திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என்று ஆர்வமாக இருப்பார்கள்.

மற்றவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அவர்களின் வளர்ச்சியை நோக்கி இவர்கள் இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல திறமையானவர்கள்.

தொழிலில் நன்றாக பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள். நன்றாக திட்டமிட்டு வியாபாரத்தை பெருக்குவது, சந்தையை பிடிப்பது, நிறைய ஆட்களை தெரிந்து வைத்துக்கொள்வது,

யாரையும் பகைக்காமல் இருப்பது, நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பகைமையை விரும்ப மாட்டார்கள்.

* சாந்தமாகவும், அமைதியாகவும் அறிவை வளர்ப்பதில் ஆர்வம்.
* மற்றவரிடமிருந்து கற்கும் ஆர்வம்
* வியாபாரத்தில் நல்ல திறமை
* திட்டமிடுதல், சந்தையை பிடிப்பது, வியாபாரத்தை பெருக்குவது.
* பகைமையை விரும்பமாட்டார்கள்.

நிகழ்வுகளை அதிகமாக கற்பனையில் பார்க்கும் குணத்தை இவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள்.

தேவைப்படும்போது இவர்களது உடலை நன்றாக பராமரிப்பார்கள். பண விஷயத்தில் இவர்கள் நன்றாக பணம் சம்பாதிக்கும் திறன், சேர்த்து வைப்பது,

குடும்பத்திற்காக செலவு செய்வது, தனது சந்தோஷத்துக்காக செலவு செய்வது, மகிழ்ச்சியாக இருப்பது,குடும்பத்தை பராமரிப்பது,

தேவையான சொத்துக்களை வாங்குவது போன்ற குணங்கள் இவர்களுக்கு உண்டு.

இந்த K எழுத்து அதிர்ஷ்டமான எழுத்தாக நாம் சொல்லலாம். சமுதாயத்துக்காக இவர்களுக்கான பொறுப்பு திணிக்கப் பட்டால் இவர்கள் அந்த பொறுப்பை செய்து முடிப்பார்கள்.

இவர்களை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை செய்ய சொன்னால் இவர்கள் அந்த வேலையை திறமையாக செய்து முடிப்பார்கள்.

பொதுவாக இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்க கூடிய தகுதியான பெயர்கள் என்று சொன்னால் இவர்களை சொல்லலாம்.

இவர்கள் தங்களது குடும்பத்தையும், தொழிலையும் பார்த்துக்கொள்ளக் கூடியஅழகான எண்ண அதிர்வுகள்கொண்டவர்கள்.

இவர்கள் ஒரு முடிவை ஒரு முறை எடுத்து விட்டால் அதிலிருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள்.

திடமான தீர்வை இவர்கள் எடுப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

பிடிவாதம் உண்டு, சில நேரங்களில் கோவப்படுவார்கள், சில சமயம் சாந்தமாகவும் இருப்பார்கள்.

பொதுவாக இவர்கள் சாந்தமாகவும், அமைதியான மன நிலையிலும் இருப்பார்கள். எதையும் திட்டமிட்டு செய்வார்கள். இவர்களுக்கு தோன்றினால் தான் செயலில் இறங்கி இவர்கள் அதை செய்தும் முடிப்பார்கள்.

K என்ற எழுத்து நேர்மறையான சின்னமாக சொல்லப்படுகிறது

அன்பைத் திணிப்பது மிகப்பெரிய பலவீனம்

அன்பை இவர்கள் திணிப்பார்கள். தாழ்மையாக பேசி தங்களது அன்பை வெளிபடுத்த இவர்களுக்கு பழக்கம் இருக்காது. இவர்களது அன்பு மற்றவர்கள் மீது திணித்து காட்டுவார்கள்.

தங்களது குடும்ப துணையிடம் அன்பை திணித்துக் காட்டுவார்கள். பெரும்பாலும் இவர்களது வாழ்வில் அதிகப்படியான கஷ்டங்கள் இருப்பதில்லை.

வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை பெறுவார்கள்.

சாதாரணமாக இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சும்மா இருந்தார்கள் என்றால் கற்பனை உலகில் கோட்டையை கட்டுவார்கள்.

எப்போவாது ஏதாவது ஒரு யோசனை இருந்துக் கொண்டே இருக்கும். நடந்ததையே திரும்ப திரும்ப நினைத்துப்பார்க்கும் குணம் இவர்களுக்கு அதிகம் உண்டு.

தனக்கென்று மரியாதை கொடுக்க வேண்டும், அவமரியாதை செய்யக்கூடாது என்பதை விரும்புவார்கள்.

தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், தன்னிடம் எல்லாரும் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை இருக்கும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு அடம் பிடிப்பார்கள். வளைந்து கொடுக்கும் தன்மை மிகவும் குறைவு. தன்னுடைய குணத்தை, அல்லது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்ற தீவிரமான எண்ணம் கொண்டவர்கள்.

எண் கணிதம் மற்றும் வேத ஜோதிடத்தில் K என்ற எழுத்து – சுக்ரன் மற்றும் சந்திரனின் காரகம்

K என்ற எழுத்து, எண் கணிதத்தில் எண் 2 ஐக் குறிக்கிறது. எண் இரண்டு என்பது சந்திரனைக் குறிக்கும் கிரகம், எழுத்து K என்பது சுக்ரனின் காரகம் கொண்டது.

இந்த எழுத்துக்கு இவை இரண்டுமே பொருந்தும். K என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு கற்பனை வளம், எழுத்து, படைப்புத்திறன், முயற்சி, தெளிவான சிந்தனை, ஆடம்பரமான வாழ்க்கை ஆகிய அனைத்துமே நிறைந்து காணப்படும்.

Related Articles

Back to top button